மாரிதாஸ் மீதான மேலும் ஒரு வழக்கு ரத்து: போலி இ-மெயில் வழக்கில் ஐகோர்ட் ஜாமீன்

Tamilnadu News Update : இந்தியாவில் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸை பரப்புவதாகவும், மாரிதாஸ் கருத்து தெரிவித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.

Tamilnadu News Update : கொரோனா தொற்று பரவுதலுக்கு காரணம் குறிப்பிட்ட சமூகத்தினர் தான் என்று கூறியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிரபலமான யூடியூபர்களில் உருவர் மாரிதாஸ். மதுரையை சேர்ந்த இவர் மாரிதாஸ் ஆன்சர்ஸ் என்ற பெயரில் உள்ள யூடியூப் சேனலில் வீடியோ பதிவிட்டு வரும் இவர், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கங்கள் கொடுத்து வீடியோவை பதிவிட்டு வருகிறார். இதனால் பல சர்ச்சைகளும் இவரை சுற்றி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் குன்னுரில் நடைபெற்ற ஹலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையல் கருத்து தெரிவித்தாக மதுரை சைபர் கிரைம் போலீசாரால கைது செய்யப்பட்ட மாரிதாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாணைக்கு வந்த இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால், தொலைக்காட்சி நிறுவனம் அனுப்பியது போல் போலி மின்அஞ்சல் அனுப்பியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே நெல்லை மேலபாளையத்தை சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர், இந்தியாவில் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸை பரப்புவதாகவும், முஸ்லீம் மக்களிடையே வெறுப்பை தூண்டும்வித்த்தில் கருத்துக்களை வெளியிடும் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்

இதனையடுத்து மேலபாளையம் போலீசார் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி உயர்நீதிமனறம் மதுரை கிளையில் மாரிதாஸ் மனுதாக்கல் செய்திருந்தார். இன்று நடைபெற்ற இந்த மனுமீதான் விசாணையில், இரு தரப்பு வாங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  தொடர்ந்து போலி இ-மெயில் வழக்கிலும் மாரிதாஸ்க்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுளளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news youtuber maridas case quashed from high court madurai branch

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express