7 பேர் விடுதலை பற்றி முதலமைச்சரிடம் பேசிய சீமான்; ஸ்டாலின் சொன்ன பதில் என்ன?

NTK Seeman Director Bharathiraja Meet CM : 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா இருவரும் முதல்வரை சந்தித்துள்ளனர்.

7 Tamilans Release Issue In Tamil : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆனாலும் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், குடியரசுத்தலவர் மற்றும் ஆளுநர் இது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் ஏழுவரும் சிறையில் உள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்ற திமுகவில் முதல்வர் ஸ்டாலின், ராஜீவ்காந்தி கொலை வழங்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை  சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகிய இருவரும் ராஜீவ்காந்தி கொலை வழங்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.  இந்த சந்திப்பு முடிந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில்,

7 பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேசி உள்ளோம். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை பொறுத்து முடிவு எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி அனைத்திலும் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றுகின்றனர்” என கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய இயக்குநர் பாரதிராஜா தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil ntk seeman director bharathiraja meet cm stalin about 7 tamils release

Next Story
மேற்கு மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு; தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்பு குறைவு தான்Tamil Nadu covid 19 cases Tamil News: Tamil Nadu not ready to open up as Covid numbers shows increased
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com