/tamil-ie/media/media_files/uploads/2021/08/barathi-baskar-1-1.jpg)
Pattimantram Speaker Bharathi Baskar Health Update : திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் தற்போது உடல்நிலை தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டிமன்றத்தில் தனது நகைச்சுவை பேச்சால் புகழ் பெற்றவர் பாரதி பாஸ்கர். நகைச்சுவையாக தனது கருத்தகளை மக்கள் மத்தியில் புகுத்திய இவர், உலக தமிழர்கள் மத்தியில் பெரும் பிரபலமான பேச்சாளராக உள்ளார். தமிழகத்தில பட்டிமன்ற நடுவராக புகழ்பெற்ற சாலமன் பாப்பையா, மற்றும் ராஜா போன்றோருக்கு இணையாக புகழ்பெற்ற இவர், கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்து வங்கியில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் இரத்த கசிவை ஏற்பட்டதாகவும், இதனை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது பாரதி பாஸ்கருக்கான மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், தறபோது அவர் தீவிர மருத்தவ கண்கானிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், பாரதி பாஸ்கர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அவர் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும், இன்னும் ஒரு வாரம் வரை அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரது ஆதரவாளர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.