Bharathi Baskar Video Update : பட்டிமன்றத்தில் கலந்து தமிழில் பல நல்ல கருத்தக்களை மக்களுக்கு எடுத்துரைத்து புகழ்பெற்றவர் பாரதி பாஸ்கர். பண்டிகை நாட்களில் பட்டிமன்றம் நடக்கிறது என்றாலே இவரது பேச்சு கட்டாயம் இருக்கும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பட்டிமன்றம் மட்டுமல்லாது பல இடங்களில் இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் வகையில் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லமைபடைத்த பாரதி பாஸ்கருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
இந்நிலையில் கடந் சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்தவுடன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று கூறி சாதி மதம் பார்க்காது பிரார்த்தனை செய்ய தொடங்கினார். அவருக்கும் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்ப்பட்டு வந்தது.
சிகிச்சைக்பு பின் தற்போது உடல்நலம் தேறிய பாரதி பாஸ்கர் விரைவில் இயல்புநிலைக்கு திரும்புவார் என்று தகவல் வெளியானது. முன்னணி வங்கியின் துணைத்தலைவர், இல்லத்தரசி, பட்டிமன்ற பேச்சாளர், என பன்முக திறமைகொண்ட இவர், மீண்டும் எப்போது பட்டிமன்றத்தில் பேசுவார் என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் தீபாவளி தினத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், தீபாவளி பட்டிமன்றத்தில் பேசுவாரா என்று மக்கள் மத்தியில் ஆவல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பட்டிமன்ற நடுவார் சாலமன் பாப்பையா கூறுகையில், பாரதி பாஸ்கர் பட்டிமன்றத்தில் பேசுவதற்கு ஆவலாக உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்க வேண்டும் அல்லா? அவர் உடல் முன்னேற்றத்திற்காக சில பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த மாதத்திற்குள் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடையும் என்று நம்புகிறோம். அதற்கான நல்ல வாய்ப்பு கைகூடும் என்று காத்திரருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது உடல்நலம் தேறியுள்ள பாரதி பாஸ்கர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், வழக்கமான சிரிப்பு மற்றும் உற்சாகத்துடன் பேசும் அவர், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். நான் உங்களுக்காக எதுவும் செய்யவில்லை ஆனாலும் நீங்கள் என்மீது அன்பு காட்டுகிறீகள். இதற்கு முக்கிய காரணம் தமிழ். நான் தமிழில் பேசியது தான் உங்களையும் என்னையும் இணைத்துள்ளது. உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மருத்துவமனையில் என்உயிரை காப்பாற்றிய அத்தனை மருத்துவருக்கும் என் மனமார்ந்த நன்றி. திரும்பவும் சந்திப்போம் நன்றி என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.