சித்திரை முதல் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பிறந்துள்ள பிலவப் புத்தாண்டுக்கான வாழ்த்துகளை, தமிழ் மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புத்தாண்டு வாழ்த்து :
அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட ஜே பைடன், இன்று புத்தாண்டு கொண்டாடி வரும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளை சார்ந்த மக்கள் அனைவருக்கும் அவர் சார்பாகவும், அவரது மனைவி ஜூல் சார்பாகவும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Jill and I send our warmest wishes to the South Asian and Southeast Asian communities who are celebrating Vaisakhi, Navratri, Songkran, and the incoming New Year this week. Happy Bengali, Cambodian, Lao, Myanmarese, Nepali, Sinhalese, Tamil, Thai, and Vishu New Year!
— President Biden (@POTUS) April 13, 2021
அவரது ட்விட்டர் பதிவில், ‘வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் என இன்று புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும், இந்த வாரத்தின் எதிர்வரும் நாள்களில் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய்லாந்து, விஷூ புத்தாண்டுகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் புத்தாண்டு வாழ்த்து :
பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழ் பெருமக்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், செல்வத்தையும் நிறைக்க இந்த நாளில் தான் பிரார்திப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Best wishes on the special occasion of Puthandu. pic.twitter.com/naA4BP4guy
— Narendra Modi (@narendramodi) April 14, 2021
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புத்தாண்டு தினத்தில், தமிழ்நாட்டில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும் என, தமிழில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும்.
— President of India (@rashtrapatibhvn) April 14, 2021
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தமிழ் மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... pic.twitter.com/d3WdiaGufm
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) April 13, 2021
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,அன்பும் அமைதியும் நிலவி, நலமும் வளமும் பெருகி, மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் வாழ உலகெங்கும் உள்ள தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் இனிய தனது, தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அன்பும் அமைதியும் நிலவி,
நலமும் வளமும் பெருகி,
மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும்
வாழ உலகெங்கும் உள்ள தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/G6yfdcHeyl— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 13, 2021
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சித்திட்ரை முதல் நாளை ஒருமித்த உணர்வோடு தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் தமிழர்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது இதயம்கனிந்த #தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! pic.twitter.com/sf7VcgHyPz
— O Panneerselvam (@OfficeOfOPS) April 14, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.