Advertisment

'ஆஃப் ' ஆன அழகிரி: பாசத்தால் கட்டிப் போட்ட ஸ்டாலின்?

MK Stalin Vs MK Azhagiri : திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
'ஆஃப் ' ஆன அழகிரி: பாசத்தால் கட்டிப் போட்ட ஸ்டாலின்?

MK Stalin Vs MK Azhagiri : தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின  மூத்த மகன் அழகிரி. தந்தை வழியில அரசியலில் நுழைந்த இவர் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 2014-ம் ஆண்டு மு.க.ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் ஏற்பட்ட தகராறில், அழகிரி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சிக்கு விரோமாக செயல்பட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்திருந்த நிலையில், பின்னாளில் நிரந்தராமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதன்பிறகு கட்சியில் இணைய முடியாமல் இருந்த அழகிரி, இது தொடர்பாக பலமுறை கலைஞரை சந்தித்தும் எவ்வித பலனும் தரவில்லை. ஆனாலும் அழகிரி விரைவில் கட்சியில் இணைவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி மரணமடைந்தார். அதன்பிறகு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட  மு.க ஸ்டாலின் அழகிரி கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அழகிரிகியின் ஆதரவாளர்கள், அழகிரி அடுத்து என்ற செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து  அவர் ரஜினி கட்சி தொடங்கியவுடன் அவருடன் கூட்டணி சேருவார் என்று கூறப்பட்டது. ஆனால் ரஜினி கட்சி தொடங்கும் அறிவிப்பை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணியில் இருப்பார் என்று தகவல் வெளியானது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அழகிரி திமுக தொண்டர்களை கவரும் வாகையில் பேசினார்.

இதனால அவர் விரைவில் புதிய கட்சி தொடங்குவார் எனவும், கட்சிக்கு கலைஞர் திமுக அல்லது கருணாநிதி திமுக என்ற இரு பெயரில் ஒன்று தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் அழகிரியின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக  திமுகவின் அதிகாப்பூர்வ நாளேடான முரசொலியில் அழகிரியின் பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த 7 வருடங்களுக்கு  முதல் முறையாக அவரின் பெயர் இடம்பெற்றதால், அழகிரியின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

சமீபத்தில் டிவி சேனல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்டாலினிடம், ஒருசில பிரமுகர்களின் பெயர்களை கூறி அவர்களை பற்றி கூறுமாறு கேட்கப்பட்டது. இதில் மு.க அழகிரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஸ்டாலின் அழகிரி என் அண்ணன் என குறிப்பிட்டுள்ளர். இது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அழகிரியின் பெயர் விடுபடாமல் இடம்பெற்றுள்ளது. இதனால் ஸ்டாலின் அழகிரியிடம் சமாதானத்திற்கு தயாராக உள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கனிமொழி அழகரி குறித்து ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில, அழகிரி புதிதாக கட்சி தொடங்கினால் திமுகவின் கனிசமான வாக்குகள் பிரியும் சூழ்நிலை உருவாகும். இந்த நிலையை சமாளிக்கவே ஸ்டாலின், கனிமொழி இருவரும் அழகிரியின் பெயரை குறிப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Mk Stalin Vs Mk Azhagiri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment