VK Sasikala Release : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது கடந்த 1996-ம் ஆண்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. பல ஆண்டுகாலம் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதா உட்பட 4 பேரும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தனர். ஆனால் அவரின் விடுதலையை எதிர்த்து திமுக தரப்பில் லேமுறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு ஜெயல்லிதா உட்பட 4-பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து 4 ஆணடுகள் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளித்த்து.
ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குதற்குள் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால், இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு தன்டனை நிறைவேற்றப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா சிறையில் இருந்த இந்த 4 ஆண்டு காலமும் அவர் மீது பலவித சர்ச்சைகள் எழுந்தாலும், அவையாவும் பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை
தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனை வெற்றிகரமாக முடித்த சசிகலா ஜனவரி 27 (இன்று) விடுதலை செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் குஷியான அமமுக தொண்டர்கள் சசிகலாவை வரவேற்க தயாரான நிலையில், அதிமுக கட்சியல் பெரும் சலசலப்பு நிலவியது. மேலும் தமிழகத்தின் பல்வேறுஅரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், உட்பட தேசிய கட்சியின் பிரமுகர்கள் வரை சசிகலா குறித்து தங்களது கருத்தக்களை கூறி வந்தனர்.
இந்நிலையில், விடுதலைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு (கடந்த வாரம்) திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. மேலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தனிமைபடுத்தப்பட்ட அவர் தொடர்ந்து மருத்துவரின் தீவிர கண்கானிப்பில் இருந்தார். தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல்நலம் தேறிய சசிகலா தனாகவே உணவு உண்பதாகவும், தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சசிகலா மருத்துமனையில் இருந்தாலும் அவரது விடுதலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறி வந்த சிறைத்துறை அதிகாரிகள், இன்று சசிகலாவை விடுதலை செய்துள்ளனர். மேலும் சசிகலா மருத்துவமனையில் இருப்பதால் அவரது விடுதலை குறித்த ஆவணங்களில் கையெழுத்து வாங்குவதற்காக மருத்துவமனை சென்ற சிறைத்துறை அதிகாரிகள் அனைத்து பணிகளும் முடிவடைந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துமனையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிகொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது வி்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா தற்போது ஆக்ஸிஜன் மாஸ்க் இல்லாமல் தானாக சுவாசிப்பதாகவும், தொடர்ந்து 3-நாட்கள் அவரின் நிலைய சரியாக இருந்தால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்க் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவதாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சசிகலா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை வரவேற்ப அமமுக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.