புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற, முதலமைச்சர் உட்பட அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டு நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என அ.தி.மு.க வலியுறுத்தியுள்ளது
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன் கூறுகையில்,
புதுச்சேரி மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு அதிமுக சார்பில் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு முன்வர வேண்டும்., ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை பெற வேண்டும், அரசு வேலைவாய்ப்பில், புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு 5 வருடம் வயது தளர்வு அளிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற, முதலமைச்சர் ரங்கசாமி உட்பட அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு நாள் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்து, மத்திய அரசுக்கு மாநில அந்தஸ்து அவசியம் குறித்து வலியுறுத்தவும், அழுத்தமும் தர வேண்டும் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“