பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
எதிர்வரும் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் விடியா திமுக அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எங்கள் கூட்டணி முழுமையாக வெற்றி பெறுவதற்கு உறுதி என முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அதிமுகவினரால் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை வரவேற்று புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாநிலக் கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில் உப்பளம் தலைமை கழகத்தில் கழக நிறுவனர் புரட்சித் தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். இதனை தொடர்ந்து பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், ஒரு உண்ணத பதவியை தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தையும் எங்களுக்கு வழங்கியுள்ளது. இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். ஒன்றரைகோடி தொண்டர்களின் விருப்ப நாள். கழகத்தினுடைய அனைத்து தொண்டர்களின் வீட்டிலும் திருநாளாகும். எடப்பாடி யார் அவர்களை கழகத்தின் பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளதை புதுச்சேரி மாநில அதிமுக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடியாருக்கும் புதுச்சேரி அதிமுக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
எதிர்வரும் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் விடியா திமுக அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் எங்கள் கூட்டணி முழுமையாக வெற்றி பெறுவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இன்று தேர்தல் ஆணையம் மாண்புமிகு எடப்பாயடியாரை பொதுச்செயலாளராக உறுதி செய்துள்ளது. எனவே ஒருசிலர் இங்கு ஓபிஎஸ் அணி என்ற பெயரிலும் அதிமுக என்கிற பெயரை பயன்படுத்துவது சட்டவிரோதமான செயலாகும்.
இனிமேல் அவர்கள் அதிமுக என்ற பெயரையும், அதிமுக கொடியையும் பயன்படுத்தி கூடாது. மீறி அதிமுக என்ற பெயரில் விளம்பரம் செய்தால் அதுபோன்ற நபர்களை கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம். கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எடப்பாடியாரை பொதுச்செயலாளராக ஏற்று அவரிடம் பொது மன்னிப்பு கேட்டுவிட்டு எங்களை அனுகினால் அவர்களை அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம் என கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil