பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
ஏழை, எளிய நடுத்தர மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் 500 ரூபாய் மானிய உதவியாக புதுச்சேரி அரசு வழங்க வேண்டும். இதை ஒன்பதாம் தேதி கூட இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி அறிவிக்க வேண்டும் என அதிமுக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் இன்று முதல்வரை பார்த்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில்,
நடைபெற இருக்கும் பட்ஜெட் சட்டமன்ற கூட்டத் தொடரில் மாநில மக்களின் நலனுக்காக நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநில உள்கட்ட அமைப்பு வசதி, சுற்றுலாவிற்கான அவசியமான திட்டங்கள், மக்களின் நலத்திட்ட உதவிகள், வருவாய் பெருக்கம், நிதி கசிவை தடுத்தல், நிதி மேலாண்மையை கட்டுக்குள் வைத்தல், அரசின் எண்ணத்திற்கு ஏற்ப நிர்வாக சீர்திருத்தங்கள், உள்ளிட்டவை அவசியமான ஒன்றாகும்.
1963- யூனியன் பிரதேச சட்டத்தின்படி நிர்வாகம் நடத்திட அலுவல் விதிகள் கொண்டுவரப்பட்டது. அதன்படி புதுச்சேரி மாநில அரசு நிர்வாகம் நடத்த துணை நிலை ஆளுநருக்கு முழுஅதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் எடுக்கப்படும் கொள்கை முடிவை ஏற்காமலும் அதை மத்திய அரசுக்கு அனுப்பி உரிய கருத்தினை கேட்டு முடிவெடுக்கவும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.
இதனால், பல்வேறு மக்கள் நலன் சார்ந்த அரசின் கொள்கை முடிவுகளை அமுல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு முழு அதிகாரம் உருவாக்க பிசினஸ்ரூலில் உரிய திருத்தம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகை காணவேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசின் துறைகளை சீர்செய்ய ஒர்க் ஸ்டடி குரூப் ஒன்று அமைக்க வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேச சட்ட 1963-ன்படி அரசு துறைகளில் பணியாளர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது. கடந்த 60 ஆண்டு காலம் ஆகியும் மறுபடியும் இதில் கால சூழ்நிலைக்கேற்ப துறைகளில் ஊழியர்கள் அதிகப்படுத்தப்படவில்லை. பல துறைகளில் தேவைக்கு அதிகமாக ஆட்கள் இருப்பதும், பல அத்தியாவசியத் துறைகளில் தேவைக்கு ஏற்ப அரசு ஊழியர்கள் இல்லாமலும் இருக்கின்றனர். இதனால் பல முக்கியமான துறை களில் மக்கள் பணி தடை ஏற்படுகிறது. எனவே, நிர்வாக சீர்த்திருத்தம் ஏற்பட உடனடியாக ஓர்க்ஸ்டடி குரூப் அமைக்க வேண்டும்.
கடந்த கால திமுக காங்கிரஸ் மத்திய ஆட்சியின் போது குரூப்-டி ஊழியர்களின் பணியினை ரத்து செய்தனர்.அதனால் மாநிலம் முழுவதும் வாட்சுமேன், லிப்ட் ஆப்பரேட்டர்,வார்டு பாய், கிளீனர், உள்ளாட்சித் துறையில் துப்புரவு பணி உள்ளிட்ட பல அரசு பணியிடங்களுக்கு தற்போது தற்காலிக ஒப்பந்த அடிப்படையின் மூலம் பணிகள் வழங்குவதால் மிகக் குறைந்த சம்பளத்திற்கு இப்பணியினை செய்யும் ஊழியர்கள் சிரமப்படுகிறார்கள். இப்பணிகள் சம்பந்ததமாக தனியார் ஒப்பந்தங்களை முழுமையாக ரத்து செய்துவிட்டு இப்பணியில் இதுவரை செய்துவரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசே நியாயமான சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இப்பணியை மேற்பார்வை இடுவதற்கு மட்டும் மொத்த சம்பளத்தில் 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதம் ஊதியமாக அவர்களுக்கு வழங்கலாம். சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறைகளில் அரசிடம் ஒவ்வொரு நபருக்கும் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு பணி செய்பவர்களுக்கு 7500ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருவதை முதலமைச்சர் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
சமையல் எரிவாயுவின் விலை ஏற்றத்தினால் பாதிக்கப்படும் ஏழை, எளிய நடுத்தர மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் 500 ரூபாய் மானிய உதவியாக அரசு வழங்க வேண்டும். தனியார் மற்றும் கோவில் இடங்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கூரை வீட்டில் வசித்து வரும் உப்பளம் தொகுதியைச் சேர்ந்த ஆட்டுப்பட்டி, ரோடியார்பேட், உடையார்தோட்டம், பிரான்சுவாதோட்டம், ராசு உடையார் தோட்டம், பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவரவர் கூரை வீடுகளை கல்வீடாக மாற்றிக் கொள்ள ரூ.5 இலட்சம் மானிய உதவியாக வழங்க வேண்டும். உப்பளம் அம்பேத்கர் சாலை தீபஓளி எதிரில் உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய வழிவகை காணப்படவேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். நடைபாதை கடைகள், ரெடிமேட் கடைகள், சாலையோர மீன்கடைகள், சாலைகளில் நிறுத்தப்படும் பள்ளி வாகனங்கள், தனியார் பள்ளிகள் தங்களது மைதானங்களை வாகனங்கள் நிறுத்துவதற்கு பயன்படுத்தாதது உள்ளிட்ட விஷயங்களில் அரசு சரியான முடிவெடுத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய வழிவகை காணவேண்டும்.
அரசு துறைகள், பொதுப்பணித்துறை, அரசு சாh;பு நிறுவனங்கள், இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்கள், மணி நேர ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் நிதி நிலைமைக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்க தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி யார் அவர்கள் அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் அரசின் இடங்களில் 7.5 சதவீதம் வரலாற்று சிறப்பு மிக்க உள் ஒதுக்கீட்டை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டத்டதை கொண்டு வந்தார். இந்த திட்டத்தை உயாநீதி மன்றமும் உறுதி செய்தது.
புதுச்சேரி மாநிலத்திலும் தமிழகத்தை பின்பற்றி அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவாகளுக்கு மருத்துவம் சார்ந்த உயாகல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய சட்டம் கொண்டு வரவேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும், விளையாட்டுத் துறையை மேம்படுத்த விளையாட்டுத் துறைக்கு தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.
கல்லூரிகளில் பல பிரிவுகளில் பணிபுரியும் விரிவுரை யாளாகள் உட்பட ஊழியாகளுக்கு வழங்கப்படும் சம்பளங்களை கருத்தில் கொண்டு கடின உழைப்பு செய்யும் சாதாரண குப்பை வாரும் தொழிலாளர்கள் உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியாகள், அரசு சார்பு நிறுவன ஊழியாகள் உள்ளிட்டவர்களுக்கு தகுந்த ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்.
மின்துறை, கலால் துறை, பிப்டிக், விற்பனை வரித்துறை, அரசுத் துறைகளில் நீண்ட நாட்கள் கடன் பாக்கி வைத்துள்ள வர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டிகளை தள்ளுபடி செய்து அசலை செலுத்த வாய்ப்பினை அளித்தால் நீண்ட கால கடன் பாக்கி தொகைகள் அதிகளவில் அரசுக்கு கிடைக்கும்.
மதுபான கொள்கையில் கால சூழ்நிலைக்கேற்ப மாற்றம் செய்து மதுபானம் கொள்முதல் மற்றும் மதுபான விநியோகம் ஆகிய இரண்டையும் அரசே ஏற்று நடத்திட தமிழகம் போன்று தனி கார்பரேஷன் ஒன்றை கலால் துறையில் ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.700 கோடிக்கு மேல் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
கடற்கரை பகுதியை சுற்றுலாவை விரிவுபடுத்த வம்பாகீர பாளையம் முகத்துவாரப் பகுதியிலிருந்து வீராம் பட்டினம் முகத்துவாரம் பகுதிவரை 200மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைத்து பாலத்திற்கு கீழ் மீன்பிடி படகுகள், மற்றும் சரக்கு கப்பல்கள் செல்ல உயரமாக ஒரு பாலம் அமைக்க வேண்டும், இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி அடையும். மிக நீண்ட கடற்கரை மணற்பரப்பு கொண்டுள்ள வீராம்பட்டினம் கடற் கரையில் சுற்றுலா மேம்படும். அதன் மூலம் கூடுதல் வருவாய் அரசுக்கு கிடைக்கும்.
கடந்த கால ஆட்சியாளார்களின் தவறான தொழிற் கொள்கை முடிவினால் மூடப்பட்டுள்ள ஏஎப்டி பஞ்சாலையை நவீனமாக்கி மீண்டும் திறக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும். அதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை எனில் ஏஎப்டி பழைய மில், ஏஎப்டி புதிய மில் உள்ள பல நூறு ஏக்கர் இடத்திலும் தனியார் பங்களிப்புடன் சர்வ தேச தரம் கொண்ட ஐடி பார்க் கொண்டுவரவேண்டும். அதன் மூலம் பொறியியல் சாப்ட் வர் படித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் தொழிற் பூங்காக்களை உடனடியாக அமைக்க வழிவகை செய்ய வேண்டும். அதன்மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடிகளில் பணியாளராகவும், உதவியாளராகவும், பணிசெய்து வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெறும் நிரந்தர ஊழியாகளுக்கு மற்ற அரசு துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன், மற்றும் ஓய்வூதிய தொகை போன்று அவார்களுக்கும் வழங்கவேண்டும்.
புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி ஆகிய இரண்டையும் இணைத்து மாநகராட்சியாகவும், அரியாங்குப்பம், வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துக்களை மக்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப நகராட்சிகளாக மாற்றம் செய்யவேண்டும். இதன் மூலம் மாநில உட்கட்ட அமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தி போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து வகையான மருந்துகள், பரிசோதனை ஆய்வுக் கூடங்கள், அமரர் ஊர்திகள், உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் கிடைத்திட உரிய வழிவகையும் அதற்கான நிதியுதவியை ஒதுக்க வேண்டும்.
மீனவர்கள் நலன் காக்க மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், அவர்ளுக்குரிய மீன்பிடி சாதனங்கள், வலைகள், ஆகியவற்றை பெறுவதற்கு அரசின் மானிய உதவிகள் தடையின்றி கிடைத்திட பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு அதிகளவில் ஒதுக்கவேண்டும். மீன்கடை விற்பனை செய்யும் பெண்களுக்கு கந்து வட்டி கொடுமைகளிலிருந்து அவர்களை காப்பாற்ற 2 இலட்ச ரூபாய் ஒவ்வொருவருக்கும் கடனுதவி வழங்க வேண்டும்.
அழிந்து வரும் விவசாய விளைநிலங்களை காப்பாற்ற அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். விவசாயம் செய்ய அஞ்சும் நிலையில் உள்ள விவசாயிகளுக்கு போதிய கடனுதவி வழங்கவேண்டும், விவசாயிகளுக்கு உரிய இடு பொருள்கள், விதை நாற்றுகள், உரங்கள் ஆகியவை மானிய விலையில் தங்குதடையின்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
காரைக்காலில் பருவம் தவறி பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கவேண்டும். காவிரியின் கடைமடைப்பகுதியான காவிரியின் உபரி தண்ணீர் கடலில் கலப்பதை தடுத்து, அதற்கான தண்ணீரை தேக்கி வைக்க இரண்டு புதிய ஏரிகளை அரசின் நிலத்தில் அரசு ஏற்படுத்தவேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மாயமான குளங்களை மீட்டெடுக்க வேண்டும். தற்போது உள்ள குளங்களிலும், ஏரிகளிலும் தண்ணீர் தேக்கி நிறுத்த தமிழக அதிமுக எடப்பாடியார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடி மராமரத்து பணியை புதுச்சேரியிலும் கொண்டு வரவேண்டும்.
மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை கண்மூடித்தனமாக செயல்படுத்துவதை நிறுத்தவேண்டும். உதாரணத்திற்கு மின் துறை தனியார் மயமாக்குதல், மின்துறை தனியார் மயமாக்குதல் என்ற முடிவிற்கு பிறகு 250 கோடி ரூபாய் செலவில் ப்ரிபெய்டு மீட்டர்கள் மாற்றுதல், ரேஷன் கடைகள் திறக்காதது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாநில உரிமை நிலை நாட்டப்பட வேண்டும்.
பொதுவிநியோக திட்டத்தின் மூலம் வீட்டு உபயோக அத்தியாவசிய உணவுப்பொருட்களான எண்ணெய் பொருட்கள், தரமான அரிசி, பருப்பு வகைகள், மாவு வகைகள், மிளகாய், உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு வழங்க பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது பத்தாண்டு காலமாக அரசுத் துறையில் படித்த இளைஞர்கள் யாரும் வேலைக்கு அமர்த்தப்படவில்லை. அப்போது 30 வயதுள்ள படித்த இளைஞர்கள் தற்போது வயது 40ஆக உள்ளது. தற்போது தங்களது ஆட்சியில் அரசுத் துறையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதால் ஓபிசி, எஸ்சி, பொதுபிரிவுகளில் உள்ள வயதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் ஐந்தாண்டு கூடுதல் வயதை உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும்.
தங்களது முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ராஜீவ் காந்தி காலை சிற்றுண்டி திட்டத்தை பாழ் படுத்தும் விதமாக கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திரு. கருணாநிதி அவர்களின் பெயரில் இந்த திட்டத்திற்கு பெயர் மாற்றம் கொண்டுவந்தனர். பெயர் மாற்றம் கொண்டுவரப்பட்டு ஒரு மாதம் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் கடந்த ஆட்சியில் முழுமையாக நிறுத்தப்பட்டது, ஏழை எளிய நடுத்தர பள்ளி மாணவர்கள் கல்வி பயிலும் அரசு பள்ளிகளில் மீண்டும் காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும்.
மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தை அமுல்படுத்தி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத ஏழை மாணவர்கள் இலவச கல்வி பயிலும் உரிமையை பெற்றுத் தர வேண்டும். மதுவிலக்கு இல்லா புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப புதிதாக ஓட்டல்களில் மது கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு ஓட்டல்களில் திறக்கப்படும் ரெஸ்டோ பார்களில் பெண்கள் நடனம், அரைகுறை நடனம், மியூசிகல் டான்ஸ், உள்ளிட்ட பல தவறான சமூக சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் விதத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதனால், ஆன்மீக பூமி என்ற புதுச்சேரி மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. சமூதாய சீர்கேடுகள் அதிகம் நடக்கின்றன. இவற்றை தடுக்கும் விதத்தில் ரெஸ்டோ பார்களில் மியூசிக் நடனம், நாட்டியம், இவைகளை தடை செய்ய வேண்டும். நகரம் முழுவதும் பெருகிவரும் ஸ்பா, மசாஜ் கிளப்புகள் இவற்றினால் சட்டம் ஒழுங்கு தொடா;ந்து சீர்;குலையும் அபாயம் ஏற்படுகின்றது. எனவே, உள்ளாட்சித்துறை, ஏற்கனவே வழங்கியுள்ள ஸ்பா, மசாஜ் கிளபுகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
சுற்றுளா என்ற பெயரில் நகர முழுவதும் அருவருக்கத்தக்க வகையில் வெளிமாநில பெண்கள் அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிகின்றனர்.மற்ற மாநில பெண்கள் சர்வசாதாரணமாக மதுபார்களில் குடித்துவிட்டு கும்மாளம் போடுகின்றனர்.குடி போதையில் சாலைகளில் வெளிமாநில பெண்கள் அரைகுறை ஆடையுடன் கீழே விழுந்து கிடக்கின்றனர் குறிப்பாக தெய்வ வழிபாடு தளங்களில் எவ்வித ஆடை கட்டுப்பாடுமின்றி வெளி மாநில பெண்கள் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் கோவில்களுக்குள் சென்று வருகின்றனர்.
இது போன்ற விஷயங்களில் அரசு சரியான வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும். இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் புதுச்சோp மாநிலம் இந்திய அளவில் மிக மோசமான கலாச்சார சீரழிவை அடையும் மாநிலமாக மாற்றப்படும். புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என அனைவருடைய எதிர்கால வாழ்க்கையும் சீரழிக்கும் விதத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்கள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றது.
கஞ்சா, பிரவுன் சுகர்,ஹான்ஸ், ஜார்தா விற்பனை செய்பவா;களை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். 3 முறைக்கு மேல் கைது செய்யப்படும் நபர்களின் சொத்துக்களை அரசு கையகப்படுத்த வேண்டும். பல ஓட்டல்களில் அதிகளவில் போதை ஏற்பட வுக்கா என்ற நீண்ட புகை போக்கி மூலம் போதை பொருட்களை கலந்து புகைப் பழக்கம் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக போதை பொருட்கள் சம்பந்தமாக ஒரு எஸ்பியின் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் கல்லூரிகளில் பணியமர்த் தப்படும் விரிவுரையாளர்கள், முதல்வர்கள், பள்ளி விரிவுரையாளர்கள், மருத்துவர்கள், உள்ளிட்ட குரூப் -எ, பிரிவில் உள்ள பணிகளுக்கு மத்திய அரசின் தேர்வு மூலம் பணிக்கு ஆட்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். அவ்வாறு நியமனம் செய்யப்படும் நபர்கள் மொழி பிரச்சனையால் வேலையை விட்டு சென்று விடுகிறார்கள். இதன் மூலம் நோயாளிகள், கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
மத்திய அரசின் தேர்வாணையின் மூலம் மேற்கூறிய பணிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படுவதால் நம் மாநிலத்தில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, நம் மாநிலத்தில் மேற்கூறிய பணிகளுக்கு ஆட்களை நியமனம் செய்ய ஸ்டேட் பப்ளிக் கமிஷன் ஒன்று ஏற்படுத்த உரிய சட்ட திட்டத்தை கொண்டுவரவேண்டும்.இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil