Advertisment

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு : புதுவை முதல்வருக்கு அ.தி.மு.க நன்றி

முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்த புதுச்சேரி மாநில அதிமுகவினர் நன்றி தெரிவித்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry

புதுவை முதல்வருடன் அதிமுக சந்திப்பு

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisment

அதிமுகவின் தொடர் போராட்டம், கோரிக்கைகளை ஏற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததற்கு முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்த புதுச்சேரி மாநில அதிமுக  செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் தலைமையில் மாநில கழக நிர்வாகிகள் சந்தித்து பூங்கொத்து மற்றும் சால்வை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

இதனைத் தொடர்நந்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில்,

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்வி இடங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக, ஏழரை சதவீதம் உள்ஒதுக்கீட்டை அன்றைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் கொண்டு வந்தார். அதுபோன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரியிலும் உரிய உள்ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் தொடர் கோரிக்கைகளும், பல கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன.

மருத்துவ கல்வியில் அரசின் இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் முடிவினை மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு ரங்கசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் கோரிக்கையை ஏற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு கல்வி அமைச்சருக்கும் அதிமுக சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக மரியாதை நிமித்தமாக கழகத்தின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்தோம். அமைச்சரவை முடிவுப்படி இந்த கல்வி ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய உள்ஒதுக்கீடு வழங்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சரியிடம் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில கழக இணைச் செயலாளர்கள் ஆர்.வி திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன்,  மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன்,  புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் எம்ஏகே.கருணாநிதி,நாகமணி, குமுதன், மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், ஆகியோர் உடனிருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment