பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரிக்கு நிரந்தர துணைநிலை ஆளுநர் வேண்டும் என்றும், ஆளுநர் தமிழிசை விளம்பர அரசியல் செய்வதாகவும், பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த சுயேச்சை எம்.எல்.ஏ,நேரு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி 2023 - 24 -ஆம் ஆண்டிற்க்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரில் உரையாற்ற வருகை தந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். பூங்கொத்து கொடுத்து வரவேற்று சபாநாயகர் செல்வம் சட்டசபை மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்
இதனை தொடர்ந்து சட்ட சபையில் துணை ஆளுநர் தமிழிசை உரையை உரையாற்றினார் அப்போது பேரவையில் இருந்த உருளையான்பேட்டை சுயேட்சை எம்.எல்.ஏ நேரு திடீரென எழுந்து மத்திய அரசே மத்திய அரசே வேண்டாம் வேண்டாம் புதுச்சேரிக்கு இரவல் ஆளுநர் வேண்டாம் என்ற எழுதப்பட்ட போஸ்டர் உடன் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நேரு கூறுகையில்,
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக உள்ள தமிழிசை எப்போது புதுவை வருகிறார் எப்போது போகிறார் என்று தெரியவில்லை. மக்கள் தேவைப்படும் நேரத்தில் அவரை சந்திக்க முடியவில்லை. ஆளுநர் மாளிகையில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்துகிறார். இதுவரை எந்த குறையை அவர் நிவர்த்தி செய்து இருக்கிறார்? மாநிலம் முழுவதும் ஆய்வு செய்கிறார் என்னென்ன குறைகளை இவர் சரி செய்து உள்ளார் என்று கேள்லி எழுப்பிய அவர் ஆளுநர் தமிழிசை விளம்பர அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
மேலும் பேருந்து நிலையத்தில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு இல்லை, சுற்றுலா மாநிலமாக உள்ள புதுச்சேரியில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை, தற்போது 13 மாநிலங்களுக்கு ஆளுநர் நியமிக்கப்பட்டார்கள் ஆனால் புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளது, இது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று கூறிய அவர், எனவே புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் எச்சரித்த சபாநாயகர் செல்வம் பேரவை தலைவருடன் சுயேச்சை எம்எல்ஏ வாக்குவாதம் செய்தார். உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் அதை மீறி பேரவையில் பதாகைகளை காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் கொண்டு வந்தார் இதனை எடுத்து பேரவையை நாளை ஒத்தி வைத்தார் சபாநாயகர் செல்வம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/