scorecardresearch

புதுவை சட்டப் பேரவை கூட்டம் : ஆளுநர் உரையுடன் தொடக்கம்

வருகிற 13-ஆம் தேதி முதல்வா் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

puducherry
puducherry

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டம் ஆளுநா் உரையுடன் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

பேரவைத் தலைவா் செல்வம் தலைமை வகிக்கிறார். ஆளுநா் உரைக்குப் பிறகு கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னா், வருகிற 13-ஆம் தேதி முதல்வா் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தையொட்டி, கூட்டரங்கம் உள்ளிட்டவற்றை புதுப்பிக்கும் பணிகள் நிறைவுபெற்றன.

சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதையொட்டி, எதிர்கட்சியினா் பேரவைத் தலைவா், முதல்வரை சந்தித்துப் பேசி வருகின்றனா்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil puducherry assembly meet start tomorrow with governor speech

Best of Express