scorecardresearch

மருத்துவ ஊழியர்கள் 700 பேருக்கு பணி நிரந்தரம்…புதுவை முதல்வர் உத்தரவு

அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்தனர்

மருத்துவ ஊழியர்கள் 700 பேருக்கு பணி நிரந்தரம்…புதுவை முதல்வர் உத்தரவு

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

பணி நிரந்தரம் செய்யக்கோரி இந்திராகாந்தி அரசு மருத்துவ மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வேன் என அரசை மிரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட  நிலையில், அவர்களை ஒரே நாளில் இரவோடு இரவாக 700 பேருக்கு பணி நிரந்தரம் செய்து முதல்வர் ரங்கசாமி பணி ஆணையை வழங்கினார்.

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்தனர் மேலும் 12 ஆண்டுகளாக எந்த ஒரு பணி உத்திரவாதமும் இன்றி மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வந்த அவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் காலை 100-க்கு மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் போராட்டம் தொடர்ந்து நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய நிலையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய துணைநிலை ஆளுநர் மாலை ஒப்புதல் அளித்தார். இதனைத்தொடர்ந்து பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அப்பா பைத்திய சாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமி பணி ஆணையை வழங்கினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil puducherry cm rangasamy give work order for 700 employees