பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரியில் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது என்றும் அதற்குள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என முதலமைச்சர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
இதனிடையே வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி (GST) பில்களைக் கேட்டு பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிங்களில் எனது பில் எனது உரிமை' எனும் பரிசு திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது.
அந்த வனையில், புதுச்சேரி சட்டப்பேரவை உள்ள முதல்வர் அலுவலகத்தில் இத்திட்டத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு இத்திட்டத்திணை தொடங்கி வைத்தார். மேலும் ,முதலமைச்சர் பொருட்கள் வாங்கியதற்கான GST பில்லை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து 'எனது பில் எனது உரிமை' பரிசு திட்டத்தில் பங்கேற்றார்.
மேலும், அப்பரிசு திட்டதிற்கான விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த துவக்க விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,சாய்.சரவணன்குமார் மற்றும் அதிகாரிகள் உட்பட வணிகர்கள் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி கூறுகையில்,
சமையல் எரிவாயு மானியம் வழங்குவதற்கான கோப்பு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் உள்ளது, அனுமதி கிடைத்தவுடன் குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பயனாளிகளுக்கு மானிய நிதி அவரவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வரும் 5 தேதி மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அதற்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி அனுமதி வரவில்லை என்றால் பழைய நடை முறையிலேயே கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“