பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரியில் பழங்குடியின விழாவில் அவர்களை தரையில் அமர வைத்து மரியாதை குறைவாக நடத்தவில்லை, அவர்களை கௌரவப்படுத்தி இருக்கிறோம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் தின விழா கம்பன் கலை அரங்கில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பழங்குடியின மக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்,
விழாவில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகள் வழங்கி துணை ஆளுநர் முதலமைச்சரும் கௌரவித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தரப்படும். அதேபோல் அவருக்கான மனைபட்டாவும் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ஒதுக்கீடு செய்வார் என தெரிவித்துள்ளார்.
மேலும் நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களை தரையில் அமர்ந்திருக்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களை புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர்களை தரையில் அமரவைக்கப்பட்டதாகவும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்படி ஒன்றும் அவர்களை மரியாதை குறைவாக நிகழ்ச்சியில் நடத்தவில்லை அதிக அளவில் ஆட்கள் வந்ததால் சேர்கள் இல்லாத காரணமாக கீழ அமர்ந்ததாக கூறப்படுகிறது உடனடியாக அவர்களுக்கு நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை அமர வைத்து அவர்களை கௌரவ படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநில உதயநாள் நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். புதுச்சேரியில் பயிலும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் நேரலை நிகழ்ச்சி மற்றும் ஜார்கண்ட் மாநில உதய நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி என ஜார்கண்ட் மாநிலம் சார்ந்த இரண்டு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்று இருக்கிறேன்.
ரூ. 24 ஆயிரம் கோடி திட்டங்கள் பழங்குடியின மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட இருக்கிறது. இன்று மகான் பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாள். நமக்கு கௌரவத்தை தந்த பழங்குடியின மக்களுக்கான கௌரவ தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.“இது எங்களுடைய மண் வேறு யாரும் ஆக்கிரமிக்க முடியாது“ என்று பிர்சா முண்டா கூறினார். முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவர்கள் முதன்மையானவராகவும் இருக்கிறார்.
பழங்குடியின மக்கள் விவசாயம் செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட போது அதற்காக போராடியவர் வெற்றி பெற்றவர் பிர்சா முண்டா. ஜார்க்கண்ட் மாநிலம் சுரங்கங்களின் இடமாகும் திகழ்கிறது. அந்த மண்ணைப் போலவே அங்கிருக்கும் மனிதர்களும் நல்ல மனப்பான்மை கொண்டவர்கள்.இதுபோன்ற மாநில உதய நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்ற பாரதப் பிரதமருக்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உழைத்துக் கொண்டிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சகோதர-சகோதரிகளுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் இனிவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சந்தித்துக் கொள்வோம். நம் எல்லைகள், மொழிகள், கலாச்சாரங்கள் வித்தியாசமாக இருந்தாலும் இந்தியர்களாக ஒன்றிணைவதுதான் நம் நாட்டின் சிறப்பு என பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.