scorecardresearch

உஷார் மக்களே… வாட்ஸ் அப் மோசடி; லட்சங்களை இழந்த புதுவை ஜிப்மர் மருத்துவர்!

தற்போது இவரது ஆன்லைன் பயனாளர் ஐடியில் ரூ.லட்சத்து 34 ஆயிரத்து 860 உள்ளது. ஆனால், அந்த பணத்தை அரிஹண்ட்டால் எடுக்க முடியில்லை.

Whatsapp Scam
Whatsapp Scam

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

புதுவை புதுசாரம் விநாயகமுருகன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் ஜெயின் இவரது மகன் அரிஹண்ட் ஜெயின் (24). இவர் ஜிப்மர் மருத்துவமனையில் ஜூனியர் ரெசிடென்ட் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 10ந் தேதி இவரது வாட்ஸ் ஆப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

டைம்ஸ் ஜாப் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி லட்சுமி ஷிரின் என்ற பெயரில் வந்த குறுஞ்செய்தியில் பகுதி நேர வேலைவாய்ப்பில் அதிக போனஸ் தொகை பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதை நம்பி இணையதளத்தில் ஒரு பயனாளர் ஐடியை உருவாக்கி முதற்கட்டமாக ரூ.1,002 டெபாசிட் செய்து ரூ.1,402 பெற்றுள்ளார்.

இதேபோல் பல கட்டங்களாக ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் வரை டெபாசிட் செய்துள்ளார். தற்போது இவரது ஆன்லைன் பயனாளர் ஐடியில் ரூ.லட்சத்து 34 ஆயிரத்து 860 உள்ளது. ஆனால், அந்த பணத்தை அரிஹண்ட்டால் எடுக்க முடியில்லை. இதுதொடர்பாக ஆன்லைனில் குறுஞ்செய்தி அனுப்பிய நபரை அணுகியபோது, இந்த பணத்தை எடுப்பதற்கு மேலும் ரூ.4 1/2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அதன்பிறகே, ஆன்லைன் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டதை அரிஹண்ட் உணர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கோரிமேடு காவல் நிலைய நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil puducherry jipmer docetor was caught in a whatsapp scam