scorecardresearch

மாசி மகம் திருவிழா : புதுச்சேரி, காரைக்காலில் அரசு விடுமுறை

மார்ச் 7 ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மகம் திருவிழா : புதுச்சேரி, காரைக்காலில் அரசு விடுமுறை

மாசி மகத்திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 7 ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா நடைபெறுவதையொட்டி,மார்ச் 7 ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மேல்நிலை பள்ளிகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த மாசி மா திருவிழாவில் செஞ்சி அரங்கநாதர் மேல்மலையனூர் அங்காளம்மன் தீவனூர் பொய்யாமொழி விநாயகர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாமிகள் கடலில்  தீர்த்தவாரி செய்யப்படும் மேலும் இதை விட்டு வைத்தி குப்பம் கடற்கரை பகுதியில் சாமிகள் வந்து தீட்டுவாரி செய்வதற்கான  ஏற்பாடுகள் புதுச்சேரி அரசு செய்து வருகிறது. போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil puducherry karaikkal school govt holyday for maasi magam