scorecardresearch

புதுச்சேரி நீதிமன்றத்தில் நுகர்வோர் குறை தீர்வு முகாம் : 5 வழக்குகளில் சமரசம்

இந்த நுகர்வோர் குறைவு அமர்வை புதுச்சேரி சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி நீதிமன்றத்தில் நுகர்வோர் குறை தீர்வு முகாம் : 5 வழக்குகளில் சமரசம்

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற நுகர்வோர் குறை தீர்வு மக்கள் நீதிமன்றத்தில் 15 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 5-வழக்கில் சமரசம் காணப்பட்டது.

மத்திய அரசு வழிகாட்டுதல் படி மாதம் தோறும் 3-வது சனிக்கிழமை நுகர்வோர் மக்கள் நீதிமன்றம் கூட வேண்டும் என்று வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் 3-வது சனிக்கிழமையான  இன்று நுகர்வோர் மக்கள் நீதிமன்ற சிறப்பு அமர்வு நடைபெற்றது.

இந்த நுகர்வோர் குறைவு அமர்வை புதுச்சேரி சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். நுகர்வோர் ஆணைய குழுத் தலைவர் முத்துவேல் தலைமையில் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் சுவிதா மற்றும் ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய அமர்வில் 15 வழக்குகள் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் ஐந்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு நுகர்வோர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இது குறித்து நுகர்வோர் ஆணைய குழு தலைவர் முத்துவேல் கூறுகையில், மத்திய அரசு வழிகாட்டுதல்படி இன்று புதுச்சேரி நுகர்வோர் நீதிமன்றத்தில் குறை தீர்வு சிறப்பு அமர்வு நடைபெற்றது.

இதில் நிலுவையில் உள்ள 400 வழக்குகளில் 15 வழக்குகள் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டு, டிவி, பிரிட்ஜ், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் சம்பந்தமான ஐந்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு நிவாரண வழங்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை நடைபெறும் இந்த சிறப்பு குறை தீர்வு அமர்வில் அனைத்து தரப்பு மக்களும் தங்களது புகார்களை தெரிவித்து நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கோரிக்கை விடுத்தார்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil puducherry news court case update in tamil