பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ரங்கசாமி ஆட்சியில் புதுச்சேரி, காரைக்கால்,மாகே மற்றும் ஏனாமை சேர்ந்த 2634 வவுச்சர் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கொள்ளை புறமாக ஊழியர்கள் பணி அமர்த்தபட்டதாக கூறி, 2634 பேரை பணி நீக்கம் செய்தது.
அன்றில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் ஊழியர்கள் போராட்டத்தை கைவிடாததால், போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“