கோவை : ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இருந்து கோவை வரை தூய்மை பணியாளர் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர் மற்றும் நிரந்தர பணியாளர்கள் என மொத்தம் 7171 பேர் உள்ளனர். இதில் 2135 பேர் நிரந்தர பணியாளர்கள் ஆவர். கொசு ஒழிப்பு பணியாளர்கள் 610 பேர் உட்பட 4763 பேர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணி செய்து வருகின்றனர். இதில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சி சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளரான பஞ்சலிங்கம் சென்னையிலிருந்து கோவை வரை நடை பயணம் மேற்கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து அவரது கோரிக்கை நடை பயணத்தை துவக்கிய அவர் தற்போது கோவை வந்தடைந்தார். இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பஞ்சலிங்கம் மாவட்ட ஆட்சியரையும் கோவை மாநகராட்சி ஆணையாளரையும் நேரில் சந்தித்து அவரது கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“