புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையத்தில் சட்டவிரோதமாக படங்களை வெளியிடும் முக்கிய தளமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் உள்ளது. புதிய படங்கள் வந்தால் அந்த தளத்தில் முறைக்கேடாக அன்றைய தினமே படங்கள் வெளியிடப்படுகின்றன.
இந்த இணையதளத்தின் உரிமையாளர் பல நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ராயன் படத்தை திருவனந்தபுரத்தில் உள்ள திரையறங்கில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன் ராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஒரு படத்திற்கு ரூ.5000 கமிஷன் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil