மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் மரணம்: தலைவர்கள் இரங்கல்

நுரையீரல் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.

journalist Sudhangan
journalist Sudhangan

மூத்தப் பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.

பிரபல ஜெயா டிவி தொலைக்காட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்தவர். 1986ம் ஆண்டு கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றவர். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை விகடனில்  எழுதியவர்.

 

 

பத்திரிகையாளர் சுதாங்கனுக்கு பல தரப்பட்ட மக்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

 

ஊரக வளர்ச்சி அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டரில், ”  மூத்த பத்திரிகையாளர் திரு. சுதாங்கன் அவர்களது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்தார்.

டிடிவி தினகரன் தனது ட்விட் செய்தியில்,” மூத்தப் பத்திரிகையாளர் சுதாங்கன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். 50ஆண்டுகளுக்கு மேலாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

 

துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டரில், “40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர் திரு.சுதாங்கன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று பதிவிட்டார்.

கொத்தடிமை முறை நடைமுறைக்கு எதிராக போராடிய சுதாங்கன், தமிழக காவல்துறை உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக சிக்கி இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்டெடுத்தார்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மக்கள் நல திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என கள நிலவரங்களை துணுச்சலாக செய்தியாக்கியவர் சுதாங்கன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil senior journalist sudhangan passes away in chennai

Next Story
அங்கன்வாடிகளில் வேலை ; பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டுகோள்Prioritise STs in recruitment of Anganwadi workeers in Anamalai tiger reserve
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com