இந்தி சர்ச்சை; சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்களா? – சிஐஎஸ்எஃப் பதில்

கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது

By: Updated: August 12, 2020, 01:01:44 PM

சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையம் சென்றபோது பெண் பாதுகாவலர் ஒருவர் இந்தி தெரியாததால் இந்தியரா? என கேட்டதாக வெளியான செய்தி கடும் சர்ச்சையை எழுப்பியது.

கனிமொழி புகார்

இதுகுறித்து கனிமொழி தனது ட்விட்டரில், “தனக்கு இந்தி தெரியாது என்பதால் சி.ஐ.எஸ்.எஃப் படை அத்காரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமார் கேட்டதற்கு அவர் நீங்கள் ஒரு இந்தியனா என்று கேட்டார். அதனால், இந்தி தெரிந்திருந்திருப்பது என்பது இந்தியன் எனபதற்கு சமமா?” எனக் கூறி #hindiimposition என்கிற ஹேஷ் டேக்கையும் பதிவிட்டிருந்தார்.

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை… வானிலை ரிப்போர்ட் என்ன சொல்கிறது?

இதைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் தரப்பு, ‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் திணிப்பது எங்கள் பாலிசியில் இல்லை’ என்று விளக்கம் அளித்தது. அதற்கு கனிமொழியும் நன்றி தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின் கேள்வி

இந்த சம்பவத்தை அடுத்துப் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கனிமொழிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”யாவா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்தி தெரிந்த மத்திய ஊழியர்களை ஆங்கிலமும் தெரிந்து கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

அதிகாரிகள் விளக்கம்

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஇ தமிழ் சார்பில் சென்னை மத்திய தொழிற்பாதுகாப்புப் படை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, அவர்கள் இதுகுறித்த உத்தரவு ஏதும் தங்கள் உயரதிகாரிகளிடம் இருந்து இதுவரை பெறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil speaking guards appoint in chennai airport after kanimozhi hindi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X