இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்கள் அனுப்பிய தமிழக முதல்வருக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் சாமான்ய மக்களின் வாழ்வியலை பெரிதும் பாதித்துள்ளது.இதனால் ஆளம் அரசுக்கு எதிரான போராட்டம், அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா மற்றும் புதிய பிரதமர் பதவியேற்று என இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் நிகழ்ந்து வருகிறது.
மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகினறனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில். கடந்த 18-ந்தேதி அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தற்போது தமிழகம் அனுப்பிய நிவாரண பொருட்கள் இன்று இலங்கையை சென்றடைந்ததை தொடர்ந்து இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம இலங்கை அரசிடம் ஒப்படைத்தார். இந்த நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தமிழக மக்களுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உட்பட ரூ. 2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்தடைந்தது. தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆதரவு அளித்த இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.' என்ற பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil