நடிகர் விஜய்யின் அரசியல் களம் கிட்டத்தட்ட தயாராகி விட்டது. பிப்ரவரி முதல் வாரத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்படும் என்றும் அதற்காக விஜய் டெல்லியில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்துவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. 2024 மக்களவை தேர்தலுக்கு நாள்கள் குறைவாக இருப்பதால் அதில் கவனம் செலுத்துவது குறைவு.
விஜய்-ஐ பொறுத்தமட்டில் அவருக்கு கர்நாடகா மற்றும் கேரளத்திலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆகவே அவரது அரசியல் கட்சி தமிழ்நாட்டிற்கு அப்பாலும் விரிவடைய வாய்ப்புள்ளது.
தற்போது கட்சிப் பதிவு பணிகளில் விஜய் தீவிர கவனம் செலுத்துகிறார். வேறு எந்தக் கட்சிகளிலும் உறுப்பினராக இல்லை என்பதற்காக 100 பேரிடம் பிரமாணப் பத்திரம் பெறும் பணிகளும் நடந்துமுடிந்து விட்டன.
இந்தப் பிரமாணப் பத்திரங்கள் அடுத்த வாரம் டெல்லி தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட உள்ளது என்றும் நடிகருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ் திரையுலகை பொறுத்தமட்டில் ரஜினிகாந்துக்கு அடுத்தப்படியாக வெகுஜன மக்களை ஈர்க்கும் ஒரு நடிகராக உள்ளார். திரையில் ஆக்ஷன் ஹீரோவாக கருதப்பட்டாலும், நிஜத்தில் வெட்கப்படக் கூடிய நபர் என்ற இமேஜ் அவருக்கு உள்ளது.
இது சற்று முரணாக கருதப்பட்டாலும், இந்த அரசியல் களம் அவருக்கு புதுமையான இமேஜை கொடுக்கும். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கேப்டன் விஜயகாந்த், கமல்ஹாசன் வரிசையில் இவரும் கட்சி தொடங்கிய நடிகராக வருவார்.
மேலும் தற்போதைய அரசியல்வாதிகளில் 49 வயதான நடிகர் விஜய் மிகவும் இளையவராக இருப்பார். தற்போதைய அரசியல்வாதிகளில் உதயநிதி (46), அண்ணாமலை (38), சீமான் (57) என உள்ளனர். இவர்களில் வயதில் மூத்தவராக சீமான் உள்ளார்.
அரசியலுக்கு வருவதற்கான விஜய்யின் முடிவு எப்போதும் அவரது லட்சிய தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகருடன் தொடர்புடையது. கடந்த ஜூன் மாதம், சென்னையில் நடந்த மாணவர் பேரணியில் அவர் கலந்து கொண்டபோது, தனது தந்தையிடமிருந்து விலகிய பல மாதங்களுக்குப் பிறகு, அவரது திட்டங்களின் நேரடி அறிகுறி முதலில் வெளிப்பட்டது. அங்கு, பள்ளி மாணவர்களிடம், அரசியல்வாதிகளிடம் ஓட்டுக்களுக்காக காசு வாங்க வேண்டாம் என்றும், பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வி.ராமசாமி, கே.காமராஜ் போன்ற தலைவர்களைப் பற்றி தங்களைப் பற்றிக் கற்றுக் கொள்ளுமாறும் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.
எம்.ஜி.ஆர் அல்லது ரஜினிகாந்த் போன்ற திரையுலக நட்சத்திரங்களை விட வயதில் குறைந்தவர் என்பதாலும், கமல்ஹாசன் அல்லது மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஆகியோரை விட அதிக ரசிகர்களைக் கொண்டவர் என்பதாலும், அவரது அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களுக்கு பதிலளிப்பதில் முன்னணி அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருந்து வருகின்றனர்.எடப்பாடி பழனிசாமி முதல் உதயநிதி, அண்ணாமலை வரை அவரது நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். விஜய்யின் நுழைவு மாநில அரசியலில் மாற்றுக் குரல்களுக்கு ஊக்கமளிக்கும் என்று சீமான் எதிர்பார்க்கிறார்.
இதற்கிடையில் நடிகர் விஜய்யின் வலுவான தமிழ் அடையாளம் அவரை ரஜினிகாந்திடம் (மராத்தி) இருந்து வேறுபடுத்துகிறது. மேலும் விஜய்க்கு பெரும்பாலும் இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர்.
கடந்த காலங்களில் ரஜினிகாந்த்-ஐ போல் விஜய்யும் சில குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவருகிறார். பட வெளியீட்டின்போது அரசியல் கதைகளை பரப்பி மார்க்கெட்-ஐ ஏற்றுகின்றனர் என்ற குற்றச்சாட்டு அது.
முன்னதாக நடிகர் விஜய் 2017ஆம் ஆண்டு மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி-ஐ விமர்சித்தார். அப்போது விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி, ப சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவை விமர்சித்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.