கோவை மாநகர பகுதியான வட கோவை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலைகழகத்தில் 21"ஆம் நூற்றாண்டின் உயர்கல்விக்கு மாணவியரைத் தயார்படுத்தும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சொந்தரராஜன் பங்கேற்றார்.
இதையும் படியுங்கள்: சாட்டை துரைமுருகனை சாகச் சொன்னாரா சுப.வீ.? வெடித்த சர்ச்சை
அப்போது துவக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை புறக்கணிப்பு செய்து விட்டு தேசிய கீதம் பாடப்பட்டது.
இதே போல கடந்த வாரம் உத்தரபிரதேச ஆளுநர் இதே பல்கலைகழகத்தில் கலந்து கொண்டபோது கணபதி ஹோமம் பாடல் பாடப்பட்டு துவங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
இந்தநிலையில், நிகழ்ச்சி முடிந்ததற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும். எல்லா இடத்திலும் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும். செமினார் என்பதால் பாடவில்லை என நினைக்கிறேன். உள் நோக்கத்துடன் நடைபெறவில்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி இருக்க வேண்டும். அதை நான் கேட்டேன். அதற்குள் ஆரம்பித்து விட்டார்கள். அதனால் விட்டு விட்டேன், என்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil