பெட்ரோல், டீசல் விலை
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்
வங்கிகளில் ரூ. 2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என RBI அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய பயிற்சி ஆட்டங்களின் முடிவுகள்
கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்
ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து
திருவனந்தபுரத்தில் நடக்க இருந்த தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இடையேயான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்தானது
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
மழைக்கு நடுவே தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் கிளம்பும் பயணிகளால் கிண்டி கத்திபாரா-மீனம்பாக்கம் சாலை, கத்திபாரா-ஈக்காட்டுத்தாங்கல் வரையிலும் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோயிலுக்கு வந்த எச்.ராஜாவை மறித்து திருப்பி அனுப்பிய பாஜக நிர்வாகி
பிறந்தநாள் சிறப்பு பூஜைக்காக கோயிலுக்கு வந்த எச்.ராஜாவை மறித்து திருப்பி அனுப்பிய பாஜக நிர்வாகி. தன்னை அழைக்கவில்லை என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மற்றொரு நிர்வாகியுடன் மோதல் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்திராமையா அறிவிப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை மனுத் தாக்கல் செய்யப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்திராமையா அறிவிப்பு!
சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து : 3 பேர் படுகாயம்
சென்னை, சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து ஏற்பட்டதில், மழைக்கு ஒதுங்கிய 3 பேர் படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கூரையை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
போக்சோ சட்டத்தின் கீழ் வயதை 16-ஆக குறைக்க சட்ட ஆணையம் எதிர்ப்பு
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் தற்போதுள்ள 18 வயதைத் தொடருமாறு சட்ட ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும் வயதை குறைப்பது குழந்தை திருமணம் மற்றும் குழந்தை கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் தீங்கு விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி
சம்பள முரண்பாட்டை களையக்கோரி 2 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள்சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுடன் தொடக்கக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
சாஹலை தேர்வு செய்யாததால் வருத்தப்பட வேண்டி இருக்கும் : யுவராஜ் சிங்
உலககோப்பை இந்திய அணியில் சாஹல் தேர்வு செய்யப்படாதது தவறு. இதற்காக வருந்த வேண்டிய நேரம் வரும்.எந்த நேரத்திலும் விக்கெட் எடுக்கும் தன்மை கொண்ட சாஹல் எதிரணிக்கு ஆபத்தானவர் நிச்சயம அவரை தேர்வு செய்திருக்க வேண்டும் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு புகழாரம் சூட்டிய பாகிஸ்தான் வீரர்
ஹைதராபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் பயிற்சிப் போட்டியில் சதம் விளாசிய பின், பேசிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் "விமான நிலையத்தில் நிறைய அன்பைக் கொடுத்தனர் இந்திய மக்கள் என்று கூறியுள்ளர்.
முடியாத பணி : மக்கள் அவதி
சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை செப்டம்பர் 30க்குள் முடிக்க இலக்கு வைத்திருந்த நிலையில், பல இடங்களில் பணிகள் நிறைவடையாததால் பொதுமக்கள் வேதனை!
பருவ மழை காலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளதாகவும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை!
கலெக்டர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம் கட்ட கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கில், உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நிலம் வழங்கிய விவசாயிகள் இழப்பீடு பெறுவது ஜனநாயக உரிமை என்று கூறி விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் இந்த வழக்கில் கடலூர், தஞ்சை, மற்றும் மயிலாடுதுறை மாவடட கலெக்டர்கள் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் காவல் நீடிப்பு
சட்டவிரோமான பணப்பறிமாற்றம் செய்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் அக்டோபர் 13-ந் தேதி வரை நீடித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
மீனவர்கள் நலன் காக்க ரூ.1 கோடி சுழல் நிதி
மீனவர்கள் நலன் காக்க ரூ.1 கோடி சுழல் நிதி உருவாக்கி தமிழக அரசு அரசாணை. கடலில் காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க சுழல் நிதி
மேகதாது குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு: கர்நாடகா
தமிழகத்திற்கு அக்.15 வரை வினாடிக்கு 3000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஆணையத்தின் உத்தரவு குறித்து கர்நாடக முதல்வர் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் கர்நாடகா நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “மேகதாது விவரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்றும் அவர் கூறினார்.
காவிரியில் 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உத்தரவு
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
காவிரி ஆணைய கூட்டம்: நீர் திறக்க கர்நாடகா எதிர்ப்பு
காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, 12,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரப்பட்டது. அதற்கு, நீர் திறந்து விட முடியாது என கர்நாடக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டனர்.
பலுசிஸ்தானத்தில் தற்கொலை படை தாக்குதல்: 52 பேர் உடல் சிதறி பலி
Explosion in Pakistan: பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலூசிஸ்தானத்தில் ஈத் மிலாதுன் நபி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் குண்டுவெடிப்பில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் முதல்கட்டமாக செய்தி வெளியிட்டுள்ளன.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம்
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையில் கூட்டம் நடக்கிறது.
7 நாட்களுக்கு மழை
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் அக்டோபர் 05 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
இரு மாநிலங்களும் ஒற்றுமையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் - அமைச்சர் துரைமுருகன்
கர்நாடக அரசின் செயல் நியாயமற்றது. கர்நாடகா திறந்துவிடும் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை
கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் நியாயமற்றது
காவிரி மேலாண்மை ஆணையத்திடம் எங்கள் கோரிக்கையை முன்வைப்போம். இரு மாநிலங்களும் ஒற்றுமையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் - அமைச்சர் துரைமுருகன்
ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் தண்டணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு. ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் தண்டணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. தண்டிக்கப்பட்டவர்களின் மேல் முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்தார் நீதிபதி வேல்முருகன்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 5 லட்சம் வசூலிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அப்போதைய கலெக்டர், எஸ்.பி, வன அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக எல்லையில் போராடிய 200 பேர் காவல்துறையால் தடுத்து நிறுத்தம்
வங்கக்கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என கணிப்பு. வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
ரூ. 2,000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றுவதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. ரிசர்வ் வங்கி உத்தரவுபடி, ரூ. 2,000 நோட்டுகளை நாளை வரை மட்டுமே வங்கிகளில் செலுத்தமுடியும்.
கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம். பெங்களூரு மற்றும் மண்டியாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு அமல். தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் சுமார் 500 பேருந்துகள், ஓசூரில் நிறுத்தம். சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களில் சோதனை. நீலகிரி தொரப்பள்ளி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு.
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் இன்று தீர்ப்பு மேல் முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம்--ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்களின் முயற்சி தோல்வி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.