Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
News Updates
சென்னையில் கனமழை
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. எழும்பூர், சேத்துப்பட்டு, சேப்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது
3,000 சிக்சர்கள் அடித்து இந்தியா வரலாற்று சாதனை
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 3,000 சிக்சர்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையை படைத்து இந்தியா அசத்தியுள்ளது
பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது தி.மு.க தலைவர்கள், பெரியார் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தென்மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை குறையலாம் – ஸ்டாலின்
ஜி20 மாநாடோ, சந்திரயான் வெற்றியோ பா.ஜ.க.,வின் சாதனை அல்ல. சாதனைகள் ஏதும் இல்லாததாலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றாதது ஏன்? தொகுதி மறுவரையறைக்கு பின் தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்
வந்தே பாரத்: அரியலூரில் திருமா வரவேற்பு
விசிக தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் ட்விட்டரில், “சென்னையிலிருந்து திருநெல்வேலி வரையிலும், திருநெல்வேலியில் இருந்து சென்னை வரையிலும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அரியலூர் மாவட்டம் வழியாக பயணிக்கும் '#வந்தேபாரத்' விரைவு ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட ரயில் நிலையத்தில் இன்று வந்தே பாரத் ரயிலை வரவேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து திருநெல்வேலி வரையிலும் & திருநெல்வேலியில் இருந்து சென்னை வரையிலும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அரியலூர் மாவட்டம் வழியாக பயணிக்கும் '#வந்தேபாரத்' விரைவு ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. அரியலூர் மாவட்ட ரயில் நிலையத்தில் இன்று வந்தே பாரத் ரயிலை வரவேற்று கொடி… pic.twitter.com/rwC1tzdJWi
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 24, 2023
50 சதவீதம் பேருக்கு மட்டுமே ரூ.1000 உதவித் தொகை: வானதி குற்றச்சாட்டு
“குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டரை ஆண்டுகள் கழித்து, 50 சதவீதத்திற்கும் குறைவான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கியுள்ளது” என வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு காவல் நீட்டிப்பு: விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் காவலை அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா ஏசிபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்திர பாபு நாயுடு தற்போது ராஜ முந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான எஃப்.ஐ.ஆர்.-ஐ ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார் பிரதமர்: மு.க. ஸ்டாலின்
“ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூறிவிட்டு இளைஞர்களை பக்கோடா விற்க பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார்” என திருப்பூர் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
கேங்மேன் பணி விவகாரம்: மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி வலியுறுத்தல்
கேங்மேன் பணி வழங்கக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கப் போராட்டிய தமிழக இளைஞர்கள் மேல் பதிந்த வழக்குகளை திரும்பப் பெறவும், அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கிடவும் விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
#கேங்மேன் பணி வழங்கக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கப் போராட்டிய தமிழக இளைஞர்கள் மேல் பதிந்த வழக்குகளை திரும்பப் பெறவும், அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கிடவும் விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 24, 2023
மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு, 2017-ஆம் ஆண்டு எனது… pic.twitter.com/Kbl6eyxkNZ
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்: தமிழிசை பயணம்
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு விடப்பட்டுள்ள வந்தே பாரத் ரயிலில் ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் பயணம் மேற்கொண்டார்.
#WATCH | Telangana Governor Tamilisai Soundararajan travelled by the Thirunelveli-Chennai Vande Bharat Express train, which was inaugurated by Prime Minister Narendra Modi earlier today. pic.twitter.com/1K1tJUkdzG
— ANI (@ANI) September 24, 2023
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் மரணம்
பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் (77) காலமானார்.
9 புதிய வந்தே பாரத் ரயில்கள்
நாட்டில் புதிய 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்தியா பந்துவீச்சு தேர்வு
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
கோவையில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு. கோவை விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்ற திமுக தொண்டர்கள். திருப்பூரில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் 14 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நீலகிரியில் 40 நாட்களில் 10 புலிகள் பலி
நீலகிரி மாவட்டத்தில் 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்த விவகாரம். நேரில் விசாரிக்க நாளை உதகை வரும் தேசிய புலிகள் ஆணைய குழுவினர். நீலகிரி மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளனர்
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் மீது தாக்குதல். மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி கொள்ளை.
மீன்களை தர மறுத்த 4 மீனவர்கள் மீது இரும்பு பைப்பால் தாக்குதல். காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி
சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள்- தமிழிசை மரியாதை
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் - தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை
நெல்லை மாலை மலர் அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை நடைபெறுவதாக அறிவிப்பு. கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்
இந்தியாவிற்கு அடுத்தடுத்து 2 வெள்ளிப் பதக்கம்
சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றது இந்தியா ரமிதா, அஷி சோக்ஸி, மெகுலி ஜோடி 1886 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது படகுப் போட்டியில் அர்ஜூன் லால், அர்விந்த் சிங் ஜோடி வெள்ளி வென்றது
நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம். நண்பகல் 12.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி, இந்தூரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை புறநகர், தாம்பரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளமாய் தேங்கிய தண்ணீர். சாலைகளில் மழைநீர் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் தாம்பரம் மாநகர மேயர் வசந்தகுமாரி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.