Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
பிகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு : பாஜக தலைவர்கள் கருத்து
பிகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை, ஏனெனில் தங்கள் கட்சியின் சமூக கொள்ளை பின்தங்கிய சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் சத்தீஸ்கரில் பஸ்தாரின் ஜக்தல்பூரில் நடைபெற்ற பேரணியில், பங்கேற்ற பிரதமர் மோடி “எதிர்க்கட்சிகள் சாதியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன” என்று கூறினார்.
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு தாய் மகன் பலி
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு தாய் சித்ரா (47) மகன் அஸ்வின் (19) மற்றும் மகள் ஆதிரா மூவரும் உயிரிழந்துள்ளனர். போலீசார் விசாரணை
15 நாள்களில் ரூ.10 கோடி தர வேண்டும்: வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஏ.ஆர். ரஹ்மான்
அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், “15 நாள்களில் ரூ.10 கோடி வழங்க வேண்டும்; பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் இசை நிகழ்ச்சி நடத்துவதாக ரூ.29.50 லட்சம் முன்பணம் பெற்றுக்கொண்டு பணத்தையும் திரும்ப தரவில்லை, இசை நிகழ்ச்சியும் நடக்கவில்லை எனப் புகார் தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.
சிவகாசியில் வெடி விபத்து: 3 பேர் படுகாயம்
சிவகாசி அருகே கங்கசெவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்ததனர். அவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
டிடிஎஃப் வாசன் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
யூடியூப் பிரமுகர் டிடிஎஃப் வாசன் நீதிமன்ற காவலை அக்டோபர் 16ஆம் தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரத்தில் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் விசாரணைக்கு காணொலி மூலமாக ஆஜரானார்.
அக்டோபர் மாத 'என் மண் என் மக்கள்' நடைபயண விபரம் வெளியீடு
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலையின், அக்டோபர் மாத என் மண் என் மக்கள் யாத்திரை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அக்.6ஆம் தேதி நடைபயணம் மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறது.
அக்டோபர் மாத - 'என் மண் என் மக்கள்' நடைபயண விபரம்@annamalai_k @amarprasadreddy @KSNarendiran #EnMannEnMakkal pic.twitter.com/CG7SQ49u0f
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 3, 2023
செய்தி நிறுவனத்தில் ரெய்டு: மார்க்சிஸ்ட் கண்டனம்
டெல்லியில் நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தில் ரெய்டு நடந்தது கண்டிக்கதக்கது என மார்க்சிஸ்ட் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தாரிகாமி, “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் வருந்தத்தக்கது... இன்று நியூஸ் கிளிக்கில் நடந்தது. நாளை அது யாருடன் இருக்கும் என்று தெரியவில்லை. ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். நியூஸ் கிளிக்கில் நடந்தது அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு: மும்முனை தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழக வீரர்
ஆசிய விளையாட்டு 2023: மும்முனை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல். 16.68 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
காஞ்சிபுரத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டது
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரயில் காஞ்சிபுரத்தில் தடம்புரண்டது. தண்டவாளத்தில் இருந்து வெளியேற்இ சாலை வந்த சரக்கு ரயில் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஆசிய விளையாட்டு - இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
ஆசிய விளையாட்டு 2023-ல் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சௌத்ரி தங்கப் பதக்கம் வென்றார். நேற்று நடைபெற்ற 3,000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த பாருல் சௌத்ரி இன்று தங்கம் வென்றார்.
தயாரிப்பாளர் ரவீந்தர் வழக்கு; ஜாமின் மனு மீது காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தொடர்பாக, புகார்தாரருக்கு ரவீந்தர் ரூ.2 கோடி கொடுத்ததாக கூறும் ஆவணங்களை ஆய்வு செய்து விளக்கம் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களை மாநில ஆக்கிரமித்துள்ளது - மோடி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி: “தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் என்.டி.ஏ கூட்டணியில் இணைய விரும்பினார். ஆனால், நான் அதை நிராகரித்தேன். தமிழகத்தில் உள்ள கோயில்களை மாநில ஆக்கிரமித்துள்ளது. கோயில்களைக் கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துகள் வருமானத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக” குற்றம்சாட்டினார்.
விசாரணை அமைப்புகள் தங்கள் வேலையைச் செய்கின்றன - அனுராக் தாக்கூர்
டெல்லியில் நியூஸ் க்ளிக் ஊடக நிறுவனத்தில் காவல் துறை சோதனை குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கருத்து: “விசாரணை அமைப்புகள் தங்கள் வேலையைச் செய்கின்றன. ஆதாரம் அல்லது புகாரின் அடிப்படையில்தான் விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி நியூஸ் க்ளிக் அலுவலகத்திற்கு சீல்
டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்தது டெல்லி சிறப்பு காவல்துறை. சீனாவுக்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் பிரசாரம் செய்ய பணம் பெற்றதாக புகார் எழுந்ததையடுத்து, நியூஸ் க்ளிக் அலுவலகம், நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு காவல்துறை சோதனை நடத்தியது.
டி.டி.எஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு
பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டி, கைதான டி.டி.எஃப் வாசனுக்கு 15 நாடகள் நீதிமன்ற காவல் வழங்கி காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே, அளிக்கப்பட்ட காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேலும் அக்டோபர் 16-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்; பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவாதத்தை ஏற்க மறுப்பு
போராடும் TET பட்டதாரிகளுக்கு தற்காலிக ஆசிரியர் பணி வழங்க தயார் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளியின் உத்தரவாதத்தை ஏற்க TET தரப்பு மறுத்துள்ளது. தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய TET தரப்பு வலியுறுத்தியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது
டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே விபத்து ஏற்படுத்திய வழக்கில், வீடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆஜரான நிலையில் மேலும் 14 நாட்கள் காவலை நீட்டித்து நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இடைவிடாத மழை; இந்தியா - நெதர்லாந்து பயிற்சி ஆட்டம் ரத்து
இடைவிடாத மழை பொழிவு காரணமாக இந்தியா - நெதர்லாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது
பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரம்; நடுவர்மன்றம் அமைக்காதது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி
பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் இத்தனை கால அவகாசம் கொடுத்தும் நடுவர்மன்றம் அமைக்காதது ஏன்?, இது இரு மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீடு என்பதை ஏன் மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை? என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு தனது நிலைப்பாட்டைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இயற்பியலுக்கான நோபல் பரிசு; எல்ட்ரான் தொடர்பான ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
பியரி அகோஸ்டினி, ஃபெரென்க் க்ராஸ்ஸ் மற்றும் அன்னே எல்'ஹுல்லியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு "பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக" வழங்கப்பட்டது.
வீடு திரும்பினார் திருமாவளவன்
சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி இரவு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று வீடு திரும்பினார்
டெல்லி என்.சி.ஆர் பகுதிகளில் நில அதிர்வு
டெல்லி என்சிஆர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து, நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் விடுத்துள்ள அறிக்கையில், “இன்று பிற்பகல் 2:25 மணியளவில் நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் டெல்லியில் உணரப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
சமூகநீதியை நிலைநாட்ட அடித்தளம் அமைத்த பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பாராட்டுகள்: சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவுக்கு வழிகாட்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) October 3, 2023
சாத்தியமே இல்லாதது என்பது போன்ற மாயை ஏற்படுத்தப்பட்டு வந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி அதன் முடிவுகளை…
சாத்தியமே இல்லாதது என்பது போன்ற மாயை ஏற்படுத்தப்பட்டு வந்த சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடிவுகளை வெளியிட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எனது பாராட்டுகள்.
சமூக நிதியை வழங்குவதில் ஆர்வமுள்ள மற்ற மாநிலங்களும், குறிப்பாக தமிழ்நாடும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் -தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஜெயக்குமார் ஆதரவு
சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள். ஆசிரியர்களை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு
இ.பி.எஸ் உடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்துள்ள நிலையில், தமிமுன் அன்சாரி சந்திப்பு. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வரும் தமிமுன் அன்சாரி. ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் உடன் உள்ளனர்.
அடுத்தப் படம் நல்ல கருத்துள்ள பொழுதுபோக்கு படம்- ரஜினி
படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தற்போது செல்கிறேன். அடுத்த படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும். 170வது படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்- நடிகர் ரஜினிகாந்த்
இளம்பெண் கொலை- உரிய இழப்பீடு கோரி ஊர்வலம்
நெல்லை டவுன் பகுதியில், 18 வயது இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். உரிய இழப்பீடு வழங்க கோரி கரிசல்குளம் பகுதி மக்கள் ஊர்வலம். 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, சாலை மறியலில் ஈடுபட உள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் போராட்டம்
3 எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு
கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு. பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் சந்தித்தனர். பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் சந்திப்பின்போது உடனிருந்தார்.
நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு
கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் சந்திப்பு
சரியான செய்தியை டெல்லி தலைமை வெளியிடும்
கூட்டணி விலகல் குறித்து இ.பி.எஸ் தெரிவித்த கருத்துக்கு நாங்கள் பதில் கூற முடியாது - பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி. கூட்டணி குறித்து தேசிய தலைமை ஆலோசித்து விரைவில் முடிவை அறிவிக்கும்
குறிப்பிட்ட நேரத்தில் சரியான செய்தியை டெல்லி தலைமை வெளியிடும்
தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறோம், அதன் ஒரு கட்டமாக பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை நடந்து வருகிறது - சுதாகர் ரெட்டி
கேசவ விநாயகம் தலைமையில் ஆலோசனை
சென்னையில் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் ஆலோசனை. கூட்டம் பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.
அ.தி.மு.க உடன் கூட்டணி தொடரவே ஆலோசனை
அதிமுக கூட்டணி தொடர வேண்டும் என்பதால்தான் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கருத்து
கடலூர்: 12-ம் வகுப்பு மாணவன் கொலை
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 12ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி படுகொலை. ஸ்ரீமுஷ்ணத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது, புளியங்குடியை சேர்ந்த ஜீவா என்ற மாணவன் கத்தியால் குத்திக் கொலை.
மின்வாரியத்தில் பணிபுரியும் ஆனந்த் என்பவர் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தகவல். பேருந்து நிலையத்தில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆனந்த் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்.
ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு வாபஸ்
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு திரும்பப் பெறப்பட்டது. 3வது முறையாக ஜாமின் கேட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் வாபஸ். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல். வாசனின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் காணொலி மூலம் ஆஜர்படுத்த போலீசார் திட்டம்
காவிரியில் நீர் திறப்பு குறைப்பு
கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரியில் நீர் திறப்பு குறைப்பு. கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு. தொடர் கனமழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு. கபினி, கே.ஆர்.எஸ் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்தின் அளவு 17,200 கன அடியாக அதிகரிப்பு. இரு அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கும் அளவு 3,179 கன அடியில் 2,592 கன அடியாக குறைப்பு
மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு ரயில்வே முடிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₨528 குறைவு. ஒரு கிராம் தங்கம் ₨5,290க்கும், ஒரு சவரன் ₨42,320க்கும் விற்பனை
ஊராட்சி செயலாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கேள்விகேட்ட விவசாயியை ஊராட்சி செயலாளர் தங்கபாண்டி எட்டி உதைத்தார் விவசாயியை எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டி தலைமறைவு
சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக இன்றும் உண்ணாவிரதம். ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் . 170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி. பள்ளிக்கல்வி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடர்கிறது. இதேபோன்று பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் 9வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்திய அணி பேட்டிங் தேர்வு
பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை. கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.