scorecardresearch

உயர் மருத்துவ சிகிச்சைக்கு கட்டண உயர்வு: ஜிப்மரை கண்டித்து திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவைனையில் கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Thirumavalavan
புதுவை ஆர்பாட்டத்தில் திருமாவளவன் (புகைப்படம் : பாபு ராஜேந்திரன்)

பாபு ராஜேந்திரன்  புதுச்சேரி

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் உயர் மருத்துவ சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜிப்மர் மருத்துவமனை முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை வகித்தார்.

விழுப்புரம், கடலூர் நிர்வாகிகள் ஆற்றலரசு, சேரன், பாமரன், முல்லைவேந்தன், அறவாழி, மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனார். பொருளாளர் தமிழ்மாறன் வரவேற்றார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசிய தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், ரவிக்குமார் எம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தலையாரி, வணங்காமுடி, திருமார்பன், விடுதலை செழியன், தாமரைச்செல்வன், செல்லப்பன், கரிகாலன், பொதினிவளவன், முன்னவன், அரிமாத்தமிழன், செந்தமிழ்செல்வன், ஆதவன், செல்வசுந்தரம், சுடர்வாளன், கார்முகில், எழில்மாறன், பார்வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஜிப்மரில் கட்டணத்தை உயர்த்தி நிர்வாகத்தை கண்டித்தும், கட்டண  உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி  கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கடலூர், விழுப்புரம், புதுவையை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil vck head thirumavalavan protest against jipmer hospital in puducherry