Advertisment

திருமண வரவேற்பில் மது விநியோகம்: மணமகள் குடும்பத்திற்கு ரூ.50,000 அபராதம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மது விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது

author-image
WebDesk
New Update
Two people died after consuming alcohol in Thanjavur

Puducherry

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisment

புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 28ம் தேதி சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவையை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையுடன் குவார்ட்டர் மதுபாட்டில் விநியோகம் செய்யப்பட்டது. இதற்கு திருமண வரவேற்பில் பங்கேற்ற பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மது விநியோகம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து பொது இடத்தில் மது விநியோகம் செய்ததாக கலால்துறையினர் மணமகள் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது.

இதன்பேரில் மதுபானம் விற்ற கடை உரிமையாளர், மண்டப உரிமையாளர், மணமகள் உறவினர் ராஜ்குமார் ஆகியோருக்கு மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கையை கலால்துறை துணை ஆணையர் குமரன் எடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment