Advertisment

விதவை உதவித் தொகை அதிகரிப்பு... பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் : புதுவை முதல்வர் புதிய அறிவிப்பு

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு, முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசினார்

author-image
WebDesk
New Update
Rangaswamy says I am sitting on the seat unable to do anything

முதலமைச்சர் ரங்கசாமி

விதவை உதவித் தொகை 2500ல் இருந்து 3000 ஆக உயர்வு; காரைக்கால் மாவட்டத்தில் திடீரென்று பெய்த மழை காரணமாக பாதிக்கபட்டுள்ளனர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 7500 இழப்பீடாக வழங்கபடும். அதே போல் அனைத்து பிரிவு பெண்களும் புதுச்சேரி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் ரங்கசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisment

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக  உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு, முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசுகையில்,  பட்ஜெட்டில் ஒரு சிலர் குறைகள் மற்றும் கோரிக்கை வைத்து உள்ளனர். முழு நிதியை செலவு செய்து, திட்டங்களை செயல்படுத்துவோம். புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். காவல்துறை பலப்படுத்தபடும்.

விதவை உதவித் தொகை 2500ல் இருந்து 3000 ஆக உயர்வு. காரைக்கால் மாவட்டத்தில் திடீரென்று பெய்த மழை காரணமாக பாதிக்கபட்டுள்ளனர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 7500 இழப்பீடாக வழங்கபடும். அதே போல் அனைத்து பிரிவு பெண்களும் புதுச்சேரி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment