/indian-express-tamil/media/media_files/2025/05/30/0qTm74AnjRCbkZio8AbE.jpeg)
TVK Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10, 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கும் விழாவை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் நடக்கும் விழாவில் முதற்கட்டமாக 88 தொகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்வில் மாணவி ஒருவருக்கு விஜய் பரிசளிக்கும் போது அவரது தாய், மது ஒழிய வேண்டும் என்றால் நாம் அனைவரும் சேர்ந்து விஜய்யை அரியணையில் ஏற்ற வேண்டும் என்று தழுதழுத்த குரலில் கண்ணீருடன் பேசினார்.
Video Credit: Puthiya Thalaimurai TV
”மதுவின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களின் கண்ணீர்க் கதைகள் ஏராளம். மது இல்லாத சமூகத்தை உருவாக்கும் கனவு நனவாக வேண்டுமென்றால், நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நம் தலைவரை அரியணை ஏற்றினால் மட்டுமே, இந்தக் கொடிய மது கலாச்சாரம் மாறும்.
ஒரு குடிகார கணவனால் பிள்ளையின் படிப்பு வீணாவதைக் கண்டு, தனி ஒரு பெண்ணாக நின்று போராடி என் பிள்ளையைச் சாதிக்க வைத்திருக்கிறேன்.
பல வீடுகளில் குடிகார கணவர்களால் பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகிப் போகிறது. இந்தக் கொடுமையிலிருந்து நம் குழந்தைகள் விடுபட வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, மது இல்லாத சமூகத்திற்கான நம் கனவை நனவாக்க வேண்டும். நம் தலைவரின் கரங்கள் ஓங்கினால், ஒவ்வொரு மகளிரின் நிலையும் மாறும்; நம் குழந்தைகளும் முன்னேறுவார்கள்.
இது ஒரு கெஞ்சிக் கேட்கும் கோரிக்கை மட்டுமல்ல. இந்த மாற்றத்தை ஏற்படுத்த நாம் அனைவரும் முன்வர வேண்டும்”, என்று அந்த பெண் கண்ணீருடன் பேசினார்.
அவரை விஜய் ஆறுதல்படுத்தி அனுப்பி வைக்கும் வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.