/indian-express-tamil/media/media_files/2025/10/03/stalin-trisha-2025-10-03-08-47-57.jpg)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம் மற்றும் நடிகை த்ரிஷா வீட்டுக்கு வெடிக்குண்டு மிரட்டல்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்படப்ட நிலையில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல்துறையில் சோதனையில் ஈடபடும்போது, இந்த மிரட்டல்கள் புரளி என்று தெரியவருகிறது. இதனை தொடர்ந்து போலீசார் இந்த மிரட்டல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தற்போது மீண்டும் பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, சென்னை பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் வீடு மற்றும் கவர்னர் மாளிகை உள்ளிட்ட பிரபலங்களின் இடத்திற்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்திய நிலையில், இந்த வெடி குண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவருகிறது.
இதில், சென்னையில், மந்தைவெளி பகுதியில் உள்ள நடிகர் மற்றும் பாஜக முன்னணி எஸ்.வி. சேகரின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல், கடந்த வாரத்தில் நடந்த மிரட்டலின் தொடர்ச்சியாக இருந்தது. முன்னதாக, போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி, மிரட்டல் பொய்யானது என கண்டறிந்தனர்.
மேலும், த.வெ.க தலைவர் விஜய் வீட்டுக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது. கரூர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனாலும், இந்த மிரட்டல் புரளி என்பது விசாரணையில் தெரியவந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us