New Update
00:00
/ 00:00
Tiruppur | Tn Bjp | Lok Sabha Election | தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் மாநிலம் முழுக்க 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டார்.
இந்த நடைபயணத்தின் நிறைவு விழாவான இன்று திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழருவி மணியன், “தமிழ்நாட்டில் பாஜக எங்கே இருக்கிறது என்ற நிலை மாறி எங்கும் இருக்கிறது என்ற நிலை உள்ளது.
பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக, ஒழுக்கமும் நேர்மையும் உண்மையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டுள்ள காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, “நான் கடந்த காலங்களில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு யாத்திரை தொடங்கினேன். அப்போது என் மனதில் இரண்டு விஷயங்கள் நினைவில் இருந்தது.
ஒன்று லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசி நிரந்தரமாக பறக்க வேண்டும். மற்றொன்று, சட்டப்பிரிவு 370 நீக்கப்பட வேண்டும் என்பதாகும். இது இரண்டும் பின்னர் நிறைவேற்றப்பட்டது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.