/tamil-ie/media/media_files/uploads/2021/01/tamilaruvi.jpg)
இறப்பு என்னை தழுவும் வரை அரசியல் ஈடுபாடு இல்லை என அறிவித்திருந்த தமிழருவி மணியன், நேற்று காந்தியா மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவராக நீடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார். அப்போது அவருக்கு பக்கபலமாக இருந்தவர் தமிழருவி மணியன். ஆனால் அதன்பிறகு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினி டிசம்பர் 2-வது வாரத்தில் கட்சி தொடங்கவில்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் பெரும் வரவேற்பை கொடுத்த நிலையில, ரஜினி ரசிகர்களுக்கும், அவருடன் இருந்தவர்களுக்கு இந்த முடிவு சோகத்தை ஏற்படுத்தியது.
இதனால் ரஜினி ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், அவருடன் இருந்த தமிழருவி மணியன் தான் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகவும், இனி இறப்பு என்னை தழுவும் வரை அரசியலில் ஈடுபடமாட்டேன் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அவர் வெளியிட்டு இரண்டு வாரங்களில் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியான காந்தியா மக்கள் இயக்கத்தின் தலைவராக நீடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 3 லட்சம் உறுப்பினர்கள கொண்ட காந்தியா மக்கள் இயக்கத்தில், அடுத்த ஆறு மாதங்களில்,10 லட்சம் உறுப்பினர்களாக உயர்த்துவதற்காக உறுப்பினர் சேர்க்கை தொடங்க முடிவு செய்துள்ளதாக கட்சியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.