Advertisment

'எல்லாமே தேர்தல் அரசியல்': பா.ஜ.க மேடையில் பா.ஜ.கவை விமர்சித்த தமிழருவி மணியன்

பாஜக உட்பட அனைத்து கட்சிகளுமே தேர்தல் அரசியல் தான் செய்கின்றனர். தேர்தலுக்குப் பிறகு பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும் என்று கோவையில் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் பேச்சு

author-image
WebDesk
New Update
Tamilaruvi.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் நவரச நாயகன் கார்த்திக்-ன் மனித உரிமை காக்கும் கட்சியின் மாநில இணை பொது செயலாளர் வெங்கடேஷ் பூபாலன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

Advertisment

இந்நிகழ்ச்சியில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய தமிழருவி மணியன், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தமிழகத்தை பொறுத்தவரை இரு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து விடுபட கல்லூரி பருவத்தில் இருந்தே தான் ஒரு தவத்தை பின்பற்றி வருகிறேன் எனவும் அந்த தவத்தை நிறைவேற்றும் மனிதராக தற்போது அண்ணாமலையை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

உண்மை நேர்மை ஒழுக்கம் நிறைந்த மனிதர்கள் தான் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் செல்ல வேண்டும் எனவும் அண்ணாமலை மூலம் அரசியல் மாற்றம் வரும் எனவும் தெரிவித்ததுடன், அதிமுக, திமுக தான் 57 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் என்ன செய்தார்கள் என மக்களாகிய நீங்களே நினைத்துப் பாருங்கள் என்றார். பொங்கலுக்கு புடவை வேஷ்டி சட்டைகள் தான் தருகிறார்கள் எனவும் அவர்கள் பொது சொத்துகளை சூறையாடுகிறார்கள் எனவும் விமர்சித்த அவர், திமுக ,அதிமுகவினர்களில் முந்தைய தலைவர்களின் பின்புலம் என்ன எனவும் தற்பொழுது உள்ளவர்கள் கோடி கோடியாய் குவித்து வருவதாகவும் தற்போதைய திராவிட கட்சி தலைவர்கள் நியாயமானவர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

இண்டியா கூட்டணியை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது என தெரிவித்த அவர், தமிழகத்தை காக்க வக்கில்லாத முதல்வர் இந்தியாவை காப்பேன் என கூறுவதாகவும் இந்தி கூட்டணிக்கு என்ன லட்சியம் உள்ளது எனவும் நீலகிரி வேட்பாளர் ஆ ராசா தேசபற்று உள்ளவரா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் தேவரை மனதில் வைத்திருந்தால் அண்ணாமலைக்கு வாக்களியுங்கள் எனவும் வலியுறுத்தினார். நேதாஜியின் தேசிய இராணுவம் பற்றி பேசிய அவர் நேதாஜி மக்களை அழைக்கும் பொழுது ஆயிரம் ரூபாய் தருகிறேன் வாருங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை ரத்தத்தை கொடுங்கள் என்று தான் சொன்னார் என தெரிவித்தார். மேலும் சென்னையை நீதி கட்சி ஆண்ட பொழுது தான் குற்றப்பரம்பரை சட்டம் இருந்தது எனவும் அதனை நீக்க அப்போது இருந்த யாரும் நினைக்கவில்லை எனவும் அந்த நீதி கட்சி வழி வந்தவர் தான் ஸ்டாலினும் அவர் உடன் இருப்பவர்களும் என்றார்.

மன்மோகன் சிங்கை ஆட்சியில் அமர வைத்து கோடி கோடியாய் கொள்ளை அடித்தார்கள் எனவும் பல்வேறு அமைச்சர்கள் கொள்ளையடித்ததாகவும் கூறினார். இன்னும் ஐந்து ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வாய்ப்பு அளித்தால் இந்தியாவை வல்லரசு ஆக்கும் நிலையை கொடுப்பார் எனவும் மக்களாகிய உங்கள் கண் முன்னால் ஸ்டாலினும் எடப்பாடியும் வரக்கூடாது இந்த மண்ணின் நலனுக்காக தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுவதாகவும் கூறி குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அண்ணாமலைக்கு எங்களுடைய ஆதரவு கரத்தை நீட்டுகிறோம் எனவும், அண்ணாமலை என்னை சந்தித்து ஆதரவை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.55 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளுக்கும் எதிராக களம் ஆடுபவன் நான் என்றும் திமுக அதிமுக ஆகிய இரண்டையும் அப்புறப்படுத்தினால் ஒழிய இந்த மக்கள் ஒருபோதும் பொன் விடியலை சந்திக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார். 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றால் கூட அதை தவறாக கருத மாட்டேன் எனவும் ஏனென்றால் நம் கண் முன்னால் இருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு என்றார். இந்த திமுக அரசுக்கு எதிரான வலிமையான கூட்டணியை பலப்படுத்தக்கூடிய பணியை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலையிடம் கூறியதாகவும்  தெரிவித்தார்.இந்தி கூட்டணி ஜெயித்தால் யார் பிரதமர் என முடிவெடுப்பதிலேயே போட்டி வரும் எனவும் இந்த நாடு நலம் பெற வேண்டுமென்றால் மோடி மீண்டும் மீண்டும் பிரதமராக வரவேண்டும் எனவும் பாசிசத்தை கொண்டு வந்தவரே இந்திரா காந்தி தான் எனவும் கூறினார்.

மேலும் அண்ணாமலை மூலமாகத்தான் பாஜக தமிழகத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசு பொருளாகியுள்ளது எனவும் அந்த அண்ணாமலை மீது பிரதமர் நம்பிக்கை வைத்துள்ளார் எனவும்  திமுக வெற்றி பெற்றால் ஸ்டாலின் பிரதமராக முடியுமா? அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் ஆக முடியுமா? எனவும் கேள்வி எழுப்பிய அவர், இந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் எந்த இடமும் இல்லை என தெரிவித்தார்.தொழில் பாதிப்புக்கு ஜிஎஸ்டி மட்டும் காரணம் அல்ல எனவும் மின்கட்டண உயர்வும் தான் காரணம் எனவும் மின் கட்டணத்தை மோடியா உயர்த்தினார் எனவும் வினா எழுப்பினார். இதேபோல் பெட்ரோலிய பொருட்கள் விலை குறித்தான கேள்விக்கு எல்லாமே தேர்தல் அரசியல் தான் எனவும் தேர்தலுக்குப் பிறகும் பெட்ரோல் விலை உயரும் அடுத்த தேர்தலில் மீண்டும் குறையும்" என பதில் அளித்தார். பாஜக மேடையில் பாஜகவை விமர்சித்த தமிழருவி மணியனின் கருத்து அங்கிருந்தவர்களிடையே திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு அண்ணாமலை கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தொடர் பிரச்சாரத்தில் இருந்ததால் இதில் கலந்து கொள்ளவில்லை.

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment