scorecardresearch

சின்மயி குற்றச்சாட்டிற்கு தமிழிசை ஆதரவு கரம்: சமூகவலைத்தளங்களில் தொடரும் விவாதம்!

திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்?

தமிழிசை ட்விட்டர்
தமிழிசை ட்விட்டர்

பாடகி சின்மயி,   கவிஞர் வைரமுத்து குறித்து முன்வைத்துள்ள குற்றச்சாட்டிற்கு , தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

#Metoo  கடந்த  சில நாட்களாக சமூகவலைத்தளங்களில்  அதிக நபர்களால் பகிரப்படும் ஹாஷ்டேக்காக மாறி வருகிறது.  இந்த ஹாஷ்டேக்கில்  பிரபலங்கள், பெண்கள் உட்பட பலர்  தங்களுக்கு எதிரான வன்முறை  குற்றங்களை பற்றி   துணிச்சலுடன் பகிர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

அந்த வகையில் பாடகி சின்மயி இரண்டு தினங்களுக்கு முன்பு  கவிஞர் வைரமுத்து குறித்து திடுக்கிடும் வகையில் பல கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.   தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிடும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்கள்  சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதே நேரத்தில் இதுக் குறித்த விவாதங்களும் சமூகவலைத்தளங்களில் அதிகரித்து வருகின்றன.  சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும், வேறு சிலர்  எதிர்மறையான கருத்துக்களையும் கூறி வருகின்றன. இந்நிலையில்  இதுக் குறித்து பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்  கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் “ பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்?  “என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

தமிழிசையின் இந்த பகிரிவு சமூகவலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.   சின்மயின் குற்றச்சாட்டிற்கு  கவிஞர் வைரமுத்து மறுப்பு கூறி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதோ அந்த பதிவு..

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilisai condemned to mass actors in chinmayi issue

Best of Express