Tamilisai Soundararaja twitter : ஒரே நாளில் 25 உறுப்பினர்களை பாஜகவில் இணைத்த கட்சி நிர்வாகியை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தமிழிசை. அதுமட்டுமில்லை அவருடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
பாஜக..டெல்லியில் இந்த கட்சிக்கு இருக்கும் செல்வாக்கும், பிரம்மாண்டமும் தமிழகத்தில் ரொம்ப கம்மி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நடந்து முடிந்து மக்களவை தேர்தலில் தமிழக பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போனது மோடி உட்பட கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை மீதே தோல்வியின் முழு காரணமும் போடப்பட்டது. பாஜக கட்சியில் இருக்கும் சிலரே, தமிழிசைக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். அவர் பதவி விலக வேண்டும் என்றும் பரபரப்புகளை கிளப்பினர்.
இவை எதற்குமே ரியாக்ட் செய்யாமல் தனக்கு கொடுத்த வேலையை தனக்கே உரிதான பாணியில் செய்துக் கொண்டிருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். 5 வருடத்திற்கு முன்பு மோடியின் அலை செல்போன் மூலம் பரவியது. மிஸ்டு கால் கொடுத்தால் போதும் பாஜகவில் இணைந்து விடலாம் என்ற விளம்பரங்களும் அதிகம் ஒளிப்பரப்பட்டன.
இப்படி மிஸ்டு கால் கொடுத்தே பாஜகவில் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இணைந்ததாக கட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதுஒருபுறம் இருக்கம், தமிழக பாஜக-வில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சி நிர்வாக இப்போது அதிகம் கவனம் காட்ட தொடங்கியுள்ளது.
அந்த வரிசையில், கடந்த ஜூலை 9 ஆம் தேதி பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி பாஜக சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை பணி நடைப்பெற்றது. அப்போது கட்சி நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையை முன்னின்று நடத்தினர். இந்நிலையில் நாமக்கலில் நடந்த பாஜக உறுப்பினர் சேர்கை முகாமில் பாஜக நிர்வாகி எம்எஸ் மணியன் என்பவர் 25 உறுப்பினர்களை ஒரே நாளில் மொத்தமாக பாஜகவில் இணைய வைத்தார். அவர் தலைமையில் அந்த 25 பேரும் பாஜக-வில் இணைந்தனர்.
இந்த தகவலை கேள்விப்பட்ட தமிழிசை சந்தோஷத்தில் மணியனை நேரில் அழைத்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். அதுமட்டுமில்லை அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துக் கொண்டார்.