New Update
/
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பேசிய வீடியோ வைரலாக பரவிய ஒரு நாள் கழித்து தமிழிசை சௌந்தரராஜன், அரசியல் பொறுப்புகளை தீவிரமாக மேற்கொள்ள உள்துறை அமைச்சர் அறிவுரை வழங்கியதாக வியாழக்கிழமை தெளிவுபடுத்தினார்.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்துகொண்டார்.
விழா மேடைக்கு வந்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்துப் பேசினார்.
தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை அமித் ஷா மறுப்பது போல் சைகை காட்டி பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. தற்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அவர் கூறிய "தேவையற்ற பொதுக் கருத்துகளுக்கு" ஷா அவரைக் கண்டித்ததாக சில பாஜக தலைவர்கள் இதைப் பார்த்தனர்.
மேலும், தமிழிசை செளந்தரராஜனிடம், சென்னை விமான நிலையத்தில் இந்த நிகழ்வு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் பதில் அளிக்காமல், நன்றி தெரிவித்து வேகமாக சென்றுவிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக சந்தித்தேன், ஆந்திராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதன்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் மக்களவைத் தேர்தலில் சந்தித்த சவால்கள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
Yesterday as I met our Honorable Home Minister Sri @AmitShah ji in AP for the first time after the 2024 Elections he called me to ask about post poll followup and the challenges faced.. As i was eloborating,due to paucity of time with utmost concern he
— Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம்) (@DrTamilisai4BJP) June 13, 2024
adviced to carry out the…
அதை நான் விவரித்துக்கொண்டிருக்கும்போது, நேரமின்மையால், மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுரை வழங்கினார். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்’ என பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.