அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும் மாணவிக்கு நீதி கேட்டும் தமிழக பா.ஜ.க-வினர் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதால் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகளை போலீசார் வியாழக்கிழமை கைது செய்யதனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு, மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே வந்த மர்ம நபர் தன்னை மிரட்டி துபுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சென்றதாக மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியின் புகாரின் பேரில் விசாரணை நடத்திய கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் தி.மு.க பிரமுகர் என்று குற்றம்சாட்டிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் மா. சுப்பிரமணியன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஞானசேகரன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பா.ஜ.க-வினர் வள்ளுவர் கோட்டத்தில் இன்று (26.12.2024) அனுமதி இன்றி போராட்டம் நடத்த முயன்றதால் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கருநாகராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது, இதைக் கண்டித்து போராட்டம் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்படுவகிறது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், மாணவி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கூடிய ஆர்வத்தை இதுபோன்ற குற்றங்களை நடைபெறுவதை தடுப்பதற்கு காவல்துறையினர் அக்கறை காட்டவில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.
I strongly condemn the @arivalayam DMK government for not allowing us to even assemble to raise our voice against the increase of atrocities and sexual harassments and against the shocking incidence of sexual harasment of a student inside the Anna university campus...the… pic.twitter.com/s00s3KIaaO
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) December 26, 2024
இந்த போராட்டம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “நான் தி.மு.க-வை வன்மையாக கண்டிக்கிறேன்; அதிகரித்து வரும் வன்கொடுமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கு எதிராகவும் குரல் எழுப்பக்கூட தி.மு.க அரசு எங்களை அனுமதிக்கவில்லை... கைதான நபர் தி.மு.க பிரமுகர்... ஒரு தனி நபராக வந்து மறியல் செய்தபோது தமிழக போலீசார் கைது செய்தனர். நான் அங்கு இறங்கியதும் 25-க்கும் மேற்பட்ட போலீசார் என்னை நகர விடாமல் சுற்றி வளைத்தனர்... 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இது தமிழகத்தில் கேலிக்கூத்து. கருத்துச் சுதந்திரத்தை நசுக்க, அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுக்க போலீஸ் கிடைக்கிறது... ஆனால் போலீஸ் கிடைக்கவில்லை. பொது இடங்களில் கூட பெண்களை பாதுகாக்க... மிகவும் கண்டிக்கத்தக்கது.. எங்கள் அமைதியான அணுகுமுறையின் போதும் நாங்கள் முற்றிலும் தவறாக நடத்தப்பட்டோம். 500 போலீசார் இருந்தனர்.. இது தமிழகத்தில் கேலிக்கூத்தானது.. கருத்து சுதந்திரத்தை நசுக்கவும், கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதை நடுக்கவும் காவல்துறை உள்ளது... ஆனால், பொது இடங்களில் கூட பெண்களை பாதுகாக்க போலீசார் இல்லை... வன்மையாக கண்டிக்கத்தக்கது.. நாங்கள் அமைதியான முறையில் அணுகியபோதிலும் நாங்கள் முற்றிலும் தவறாகக் கையாளப்பட்டோம். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்களுக்கும் தமிழ்நாட்டு மகளிருக்கும் பதில் சொல்ல வேண்டும்..இந்த திமுக அரசை தூக்கி எறிய வேண்டும்... தமிழகத்தில் பெண்களை காக்க தவறியதற்காக #ஸ்டாலின் உங்களுக்கு அவமானம்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை.
— K.Annamalai (@annamalai_k) December 26, 2024
மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி.
சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் @mkstalin அவர்களே? #ShameOnYouStalin pic.twitter.com/sOACOWhEDk
இதனிடையே, “ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை” என்றும் மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி பரப்பப்படுகிறது என்றும் சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அண்ணாமலை ‘ஷேம் ஆன் யூ ஸ்டாலின் (#ShameOnYouStalin) என்ற வாசகத்தை உயர்த்தி பிடித்தபடி புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.