தெலங்கானா ஆளுநராக தமிழிசை: சர்வ கட்சி தலைவர்கள் வாழ்த்து

Tamilisai Soundararajan as Governor of Telangana: மத்திய அரசு மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தும் ஆளுநர்களை மாற்றம் செய்தும் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tamilisai Soundararajan, Telangana Governor Tamilisai Soundararajan, Bjp, BJP President Tamilisai, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக மக்கள் மகிழ்ச்சி, Tamilisai as Telangana Governor, All Party leaders wishes, public wishes Tamilisai
Tamilisai Soundararajan, Telangana Governor Tamilisai Soundararajan, Bjp, BJP President Tamilisai, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக மக்கள் மகிழ்ச்சி, Tamilisai as Telangana Governor, All Party leaders wishes, public wishes Tamilisai

Tamilisai Soundararajan as Governor of Telangana: தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மத்திய அரசு ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா, உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பகத்சிங் கோஷியரி மகாராஷ்டிரா ஆளுநராக புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரளா ஆளுநராக ஆரிஃப் முஹம்மது கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம், 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதையடுத்து, அவர் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

தான் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சியில் கண்கலங்கி கூறுகையில், “என்னை ஆளுநராக நியமனம் செய்தது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. ஆண்டவனுக்கும், நாட்டை ஆண்டு கொண்டிருப்பவருக்கும் மனமார்ந்த நன்றி. எல்லோரும் ஒரே நாடு என்ற எண்ணத்துடனே தெலங்கானா செல்கிறேன். தெலங்கானா ஆளுநர் ஆனாலும், என்றுமே தமிழக மக்களுக்கு நான் சகோதரி தான். பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி. என் மீது பாசத்தை பொழிந்த தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. தெலங்கானா வளர்ச்சிக்கு மட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன். விமர்சனங்களை தாங்கிக்கொண்டால் விமரிசையாக வாழலாம் என்பதற்கு நான் உதாரணம்.” என்று கூறினார்.

தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழிசை சௌந்தரராஜனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததோடு, தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழிசை சௌந்தரராஜன், அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி “ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் தமிழிசைக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்த பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டிசம்பர் மாதத்துக்குள் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு புதியதாக ஒருவர் நியமிக்கப்படுவார் என்று கூறினார் மேலும், தமிழிசை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவரை இனி கட்சியுடன் இணைத்து பேசக்கூடாது என்று கூறினார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், “தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு இப்பதவி அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த திமுக எம்.பி கனிமொழி, தெலங்கானா மக்களுக்காக தமிழிசை சிறப்பாக பணியாற்றுவார் என நம்புகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழ்வார் என்று நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதால் அடுத்த பாஜக தலைவர் யார் நியமிக்கப்படுவார்கள் என்ற விவாதம் தமிழக பாஜகவில் எழுந்துள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilisai soundararajan as governor of telangana

Next Story
வெளிநாட்டு டூர் அமைச்சர்கள் யார் யார்? முழு பட்டியல் இங்கேTamil Nadu chief minister and other ministers visiting foreign countries
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com