Advertisment

'காவியைப் பார்த்தும் பயம்; கருப்பை பார்த்தும் பயம்': தி.மு.க-வை சாடிய தமிழிசை

'ஆளுநரை பார்த்தால் பயம், மக்களைப் பார்த்தால் பயம், எதிர்க்கட்சிகளை பார்த்தால் பயம், பெண்கள் அணியும் கருப்பு துப்பட்டாவை பார்த்தால் பயம் என்றால் தமிழகத்தில் என்ன ஆட்சி நடக்கிறது?' என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilisai Soundararajan attacks on DMK GOVT coimbatore press meet Tamil News

'எதிர்க்கட்சிகளுக்கு தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உரிமை இருக்கிறதா இல்லையா? ஆளுநருக்கு தமிழகத்தில் தன்னுடைய கருத்தை சட்டமன்றத்தில் கூறுவதற்கு உரிமை இருக்கிறதா இல்லையா?' என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Advertisment

பா.ஜ.க மற்றும் எதிர்க் கட்சிகளின் போராட்டங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி கிடையாது. பெண் தலைவர்கள் எப்பொழுதுமே வீதியில் இறங்கி போராட அனுமதி கிடையாது. தி.மு.க ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி, மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிரான மனநிலையில் நாங்கள் இல்லை என எப்பொழுதோ கூறி விட்டது.  ஆனால் தி.மு.க சார்ந்த கட்சிகளுக்கும் தி.மு.க வுக்கும் போராட எப்பொழுதுமே அனுமதி உண்டு. 

இன்று தேசிய கீதம் உதாசீனப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதுக்கு ஆளுநர் ஒரு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். ஆனால் நீங்கள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் அனுமதி கொடுத்திருக்கிறீர்கள். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், தி.மு.க நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? இங்கு என்ன ஆட்சியை நடந்து கொண்டு இருக்கிறது கேட்டால் ஆளுநர் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் என்று கூறுகிறீர்கள். 

தேசிய ஒற்றுமைக்கான தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று சொன்னால் அதை பிரிவினைவாதம் என்று புதிய அர்த்தத்தை தமிழக அரசால் தான் கற்பிக்க முடியும். வேங்கை வயல் பிரச்சனையை நீங்கள் தீர்த்தீர்களா, ஆண்ட பரம்பரை என்று உங்கள் அமைச்சர் ஒருவரே ஜாதக பாகுபாடுகளோடு பேசுகிறார் அதை கண்டித்துவீர்களா, வேறுபாடையும், பிரிவினைகளையும் ஏற்படுத்துவது தி.மு.க அரசு தான் அதை கண்டிக்காதது முதலமைச்சரின் தவறு. 

Advertisment
Advertisement

ஆளுநர் தேசிய கீதத்திற்காக ஒரு கோரிக்கை வைத்தார் அதை நிராகரித்து விட்டு, இன்று அவருக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிற பெண்களுக்கு எதிராக குற்றம் நடந்து கொண்டு இருப்பதை மறைப்பதற்காக இன்று ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். அதனால் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன் இதற்கு தமிழக அரசு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும். 

கடந்த 10 நாட்களில் ஆயிரக் கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் கைதாகினர். தமிழக தெருக்களில் கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஆனால் ஆளும் கட்சிக்கு அனுமதியா என்ற கேள்வி கேள்வி எழுகிறது. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறோம் என்று கூறினால் ஐந்து நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறீர்கள். நேற்று அனுமதி பெற்று இன்று ஆர்பாட்டம் நடத்துகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை தற்போது நசுக்கப்படுகிறது, தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை என்ற குற்றச்சாட்டை நான் முன் வைக்கிறேன். 

தமிழ்நாட்டில் யார் அந்த சார் என்று கேட்கும் போது, தமிழகத்தில் யார் அந்த பாட்டி என்றும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். பொங்கல் தொகுப்பில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை, அதனால் அந்தப் பாட்டி முதலமைச்சரின் மீது ஏதோ ஒரு கோபத்தில் பேசியிருக்கிறார். அதை அரசியல் சாராத ஒரு தம்பி படம் எடுக்கிறார் அவரை கைது செய்கிறீர்கள் என்றால், கருத்து சுதந்திரத்தை நீங்கள் எவ்வளவு நசுக்குகிறீர்கள், தற்போது அந்த எதிர்ப்பை தெரிவித்த பாட்டி யார் ? என்று தேடிக் கொண்டு இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் யார் அந்த சார் ? என்று கேட்கிறார்கள் ஆளுங்கட்சி யார் அந்த பாட்டி என்று கேட்கிறார்கள். இங்கு கருத்து சுதந்திரம் முற்றிலுமாக நசுக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணே ஒருவர் பேசியதாக கூறுகிறார். ஆனால் நீங்கள் ஏன் உண்மையை மறைத்து ஓடி ஒளிகிறீர்கள், முதலமைச்சர் வரம்பு மீறி ஆளுநரை பற்றி ஒரு ட்வீட் போடுகிறார். ஆனால் அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஏன் இதுவரையும் வாய் திறக்கவில்லை. சகோதரி கனிமொழி சொல்கிறார் அது தான் ஏற்கனவே விசாரணை நடக்குதே, அப்புறம் ஏன் நீங்கள் போராட வேண்டும் என்று கேட்கிறார். அப்புறம் ஏன் இன்று ஆளுநருக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள் அது தான் அதற்கான பதிலை நேற்று அவர் கூறிவிட்டார். 

யாரை எதிர்த்து போராட்டம் செய்கிறீர்கள், உங்கள் ஆட்சியை பற்றி தான் நீங்கள் போராட்டம் செய்கிறீர்கள். தமிழக அரசு தவறான வழியில் செல்கிறது என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகள் ஒரு பெரும் சான்று. பொங்கல் பண்டிகை வருகிறது, தற்போது பொங்கல் கொண்டாடும் மக்களுக்கான கொண்டாட்டத்தொகை எங்கே. பொங்கல் சூரியன் உதிக்கும் போது பணம் கொடுத்தால் தேர்தல் சூரியன் உதிக்கும் போது மக்கள் அதை மறந்து விடுவார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றையுமே தேர்தல் கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டு இருக்கும் தி.மு.க விற்கு 2026 மிகப் பெரிய அடியை கொடுக்கும். 

திராவிட முன்னேற்ற கழகம் தேசியத்தின் மீது எவ்வளவு அக்கறை கொண்டார்கள் என்று எல்லாருக்கும் தெரியும் சுதந்திரமே இங்கு வேண்டாம் என்று கூறியவர்கள், தங்களுடைய கட்சி அலுவலகத்திலேயே குடியரசு தினம் சுதந்திர தினத்திற்கு ரொம்ப நாட்கள் கழித்து தான் கொடியேற்றுகிறார்கள். நீங்கள் பலமுறை ஆட்சிக்கு வந்தும், ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் தமிழ்த்தாய் வாழ்த்தே வந்தது. நீங்கள் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட மறந்தீர்கள்? முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை. 

கருப்புத் துப்பட்டா போட்டால் உங்களுக்கு என்ன? ஆடை எங்களது உரிமை, என்று பேசிக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா? ஒரு பெண் சுதந்திரமாக கருப்பு துப்பட்டா போட்டு வர முடியவில்லை என்றால் என்ன ஆட்சி நடக்கிறது இங்கே? ஆளுநரை பார்த்தால் பயம், மக்களைப் பார்த்தால் பயம், எதிர்க்கட்சிகளை பார்த்தால் பயம், பெண்கள் அணியும் கருப்பு துப்பட்டாவை பார்த்தால் பயம் என்றால் தமிழகத்தில் என்ன ஆட்சி நடக்கிறது. காவியை பார்த்து முதலில் பயந்தீர்கள், அதை நாங்கள் எங்களுடைய நிறம் என அனுமதித்தோம். ஆனால் கருப்பை பார்த்து ஏன் இப்பொழுது பயப்படுகிறீர்கள்? ஒரு பெண் துப்பட்டா போடுவதற்கு தமிழகத்தில் உரிமை இருக்கிறதா இல்லையா?. எதிர்க்கட்சிகளுக்கு தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உரிமை இருக்கிறதா இல்லையா? ஆளுநருக்கு தமிழகத்தில் தன்னுடைய கருத்தை சட்டமன்றத்தில் கூறுவதற்கு உரிமை இருக்கிறதா இல்லையா?
 
நான் பாண்டிச்சேரியில் ஆளுநராக இருந்தபோது கூட தேசிய கீதம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் அதன் பின்பு தான் உரையை ஆரம்பிப்போம். தேசிய கீதத்தை வைத்து இவ்வளவு பெரிய அரசியல் செய்கிறீர்கள், தமிழகத்தில் எல்லா குரல்களையும் நசுக்கப்படுவது உண்மையான உண்மை. உங்களுடன் கூட்டணியில் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக பேசுகிறார்கள். தி.மு.க கூட்டணி இன்று வெலுவெலுத்து போய் இருக்கிறது.  

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Dmk Protest Tamilisai Soundararajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment