Advertisment

’இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இணையதளம்’: பட்டமளிப்பு விழாவில் தமிழிசை

நோபல் பரிசு பெற்ற நாடுகளில் எல்லாம் குழந்தைகள் ஆறு வயதுக்கு மேல்தான் முதல் வகுப்பில் சேர்ந்து படிக்க தொடங்குகிறார்கள். என இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
’இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இணையதளம்’: பட்டமளிப்பு விழாவில் தமிழிசை

நோபல் பரிசு பெற்ற நாடுகளில் எல்லாம் குழந்தைகள் ஆறு வயதுக்கு மேல்தான் முதல் வகுப்பில் சேர்ந்து படிக்க தொடங்குகிறார்கள். என இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Advertisment

புதுச்சேரி, காஞ்சிமனிவர் அரசு பட்ட மேற்படிப்பு & ஆராய்ச்சி நிறுவனத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழா இன்று (23.02.2023) ஜிப்மர் வளாகத்தில் உள்ள டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் கலையரங்கத்தில் நடைபெற்றது.  துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

முதலமைச்சர்  ந. ரங்கசாமி,  சட்டப்பேரவைத் ஆர். செல்வம், உள்துறை & கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர். எஸ். கௌரி,  ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் பேசுகையில்

இன்று பட்டம் மற்றும் படித்து பட்டம் பெரும் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளும் ஒரு நாள் இருக்கிறது என்றால் அது பட்டமளிப்பு நாள் தான்.

publive-image

இந்த பட்டங்களையும் பதக்கங்களையும் வாங்குவதற்கு பல தியாகங்களை செய்திருக்கிறீர்கள். உங்களது கடுமையான உழைப்பின் மூலம் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். இதை மூலதனமாக வைத்துதான் வாழ்க்கை கட்டமைக்கப் போகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் அதுவும் கொரோனா காலங்களை கடந்து மாணவர்கள் பட்டம் பெற்றிருப்பது சவாலான ஒன்றுதான்.

இன்று இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இணையதளம், சமூக ஊடகம். உண்மையில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பெற்றோர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களின் தியாகங்களால்தான் நீங்கள் இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள். தாய் தந்தையரின் தியாகம் கணக்கில் அடங்காதது அதை நினைத்தால் நாம் வேகமாக வளர முடியும். பலருக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் நேர நிர்ணயம் செய்து வெற்றியாளர்களாக மாற வேண்டும். நாம் அசாதாரண வாழ்க்கை நடத்த பிறந்தவர்கள். அதறகான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு தத்துவயியல் மேதையாக விளங்கினார். பல புத்தகங்கள் எழுதினார். தொடக்கத்தில் அவர் படிப்பதில் சிரமம் இருந்தது. அந்த துறையில் படித்தவர் தந்த புத்தகங்களை படித்து அவர் அறிஞர் ஆனார். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை திட்டமிடப்பட வேண்டும் எதிர்கால இலக்குகள் என்ன என்பதை நிர்ணயிக்க வேண்டும்.

publive-image

நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று இருக்கிறது. உலகத்தில் ஐந்தாவது பொருளாதார பலம் பெற்ற நாடாக முன்னேறிக் கொண்டிருக்கின்ற இந்தியா மூன்றாவது பொருளாதார பலம் பெற்ற நாடாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது மட்டுமல்ல அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் அரசு நடைபெற்று வருகிறது.

மத்திய அரசும் புதுச்சேரி மாநில அரசும் இளைஞர்களுக்கான பல திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். “ஸ்டேண்ட் அப் இந்தியா“, “ஸ்டார்ட் அப் இந்தியா“, “மேக் இன் இந்தியா“ இவையெல்லாம் இளைஞர்களுக்கு உதவி செய்வதற்காக பல திட்டங்கள்.

இந்திய இளைஞர்களை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு மாற்றுவதற்காக தான் இந்த புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்திருக்கிறோம் என்று பாரதப் பிரதமர் சொன்னார். இன்று, ஆறு வயது கடந்து தான் முதல் வகுப்பில் சேர வேண்டும் என்ற திட்டத்தை அரசு அறிவித்திருக்கிறது. நோபல் பரிசு பெற்ற நாடுகளில் எல்லாம் குழந்தைகள் ஆறு வயதுக்கு மேல்தான் முதல் வகுப்பில் சேர்ந்து படிக்க தொடங்குகிறார்கள். அதேபோல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடன் கல்வியை தர வேண்டும் என்று கூறுகிறது.

publive-image

புதுச்சேரி அரசு பல திட்டங்களை மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இளைஞர்களுக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். கடமை இருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் எதற்காகவும் தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி தொலைக்காதீர்கள். மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.

publive-image

இங்கே மாணவிகள் அதிக பட்டம் பெற்று இருக்கிறார்கள். ஆனால் மாணவிகள் ஆராய்ச்சி படிப்புகளில் குறைவாக ஈடுபடுகிறார்கள். குறிப்பிட்ட மேற்படிப்புகளில் குறைவாக தான் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சவாலான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். சவாலான துறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுமைகளை தாங்கும் அளவிற்கு நமது தோள்களை வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சுமைகள் இல்லாத மனிதர்களே இல்லை. அதன் மூலம் நமது வாழ்க்கையை எளிமையாக்கி, மகிழ்ச்சியாக முன்னேற வேண்டும் என்ற மாபெரும் திட்டத்தை இன்றிலிருந்து வகுத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு ஆசிரியர்களை பெருமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment