கன்னியாகுமரி ஹிந்து தர்ம வித்தியா பீட பட்டமளிப்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், குமரி எனது தந்தை மாவட்டம், நெல்லை எனது தாய் மாவட்டம், சென்னை எனது சகோதரர் மாவட்டம், கோவை நான் குடி புகுந்த மாவட்டம்.,
Advertisment
குமரிக்கு வரும்போதெல்லாம் எனது தாய் வீட்டிற்கு வருவது போன்ற மகிழ்ச்சியை தருகிறது. நான் தெலுங்கானா, புதுவை ஆளுநராக சமகாலத்தில் பணியாற்றுவதை குறித்து செய்தியாளர்கள் கேட்கின்றனர். நான் ஒரு மகப்பேறு மருத்துவர். பல தாய்மார்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கும் போது தாயையும், சேயையும் முறையாக கண்காணித்து பரமரித்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு. அந்த அனுபவத்தில் இரண்டு மாநிலத்தை கவனமாக என்னால் நிர்வாகம் செய்யமுடியும் என தெரிவித்தவர் அடுத்து இந்த மண்ணின் மரபு நம்மை உயர்த்துகிறது.
தமிழகத்தில் இந்துத்துவா ஆக்கிரமிப்பு செய்கிறது என்ற தோற்றத்தை. திட்டமிட்டு தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றனர்.
காவியின் பலத்தை கருப்பால் மறைத்து விட முடியுமா.? நான் இதை தெரிவித்தால். ஒரு ஆளுநர் இப்படி பேசலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்திய அரசியல் உரிமை சட்டம் உங்களுக்கு கொடுத்துள்ள அதே உரிமை எனக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
குமரிக்கு வந்தால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கும், திருவனந்தபுரம் சென்றால் பத்மநாபசாமி கோவிலுக்கும் சென்று வணங்குவதை எப்போதும் நான் மறப்பவள் அல்ல.
கடவுள் கிடையாது, கோவிலுக்கு செல்லக்கூடது என்று பேசுபவர்களின் வீட்டு பெண்கள் எத்தனை, எத்தனை கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே...
அவர்களின் இல்ல விழாவில் ராகு காலம், நல்ல நேரம் எல்லாம் பார்த்து தான் செய்கிறார்கள். இதை பொது வெளியில் அவர்களால் மறுக்க முடியுமா.?
கொரோன என்ற பெரும் தொத்து வந்த போது11 மாதங்களிலே அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்து, உலகின் பல நாடுகளுக்கு நம் நாட்டில் இருந்து கொரோனா நோய் தடுப்பு மருந்து கொடுத்து அந்த நாடுகளை சேர்ந்த மக்களை காத்தவர் நம் பிரதமர் மோடி.
ஆழ்வார்களும், நாயன்மார்களும் வளர்த்த தமிழுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அந்த உரிமை யாருக்கும் கிடையாது என தமிழிசை தெரிவித்தார்.
செய்தி: த.இ.தாகூர், குமரி மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“