தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ஹெச் ராஜா, நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அவருக்கு நெஞ்சு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. மேலும், அவருக்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது.
தற்போது மருத்துவர்கள் அவருக்கு இருதய அருவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் அவர் மருத்துவ ஓய்வில் இருந்துவருகிறார்.
இந்த நிலையில் அவரை தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (அக்.12) சந்தித்துப் பேசினார்.
இது குறித்து அவர், “உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த தலைவர் சகோதரர் H.ராஜா அவர்களை சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தேன்.
அப்போது அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மருத்துவர்களிடம் அவரின் உடல்நலம் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தேன்.
அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்ற இறைவனை பிராத்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“