scorecardresearch

’நான் போடும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட்: ரூ. 2000 தடை: தமிழிசை பதில்

ரூ. 2000 திரும்பப்பெறுதல் குறித்து தமிழிசையிடம் கேட்டபோது, “ நான் போடும் கோட்டும் ஒயிட்: நோட்டும் ஒயிட்” என்று பதிலளித்துள்ளார்

ரூ. 2000 தடை: தமிழிசை பதில்
ரூ. 2000 தடை: தமிழிசை பதில்

ரூ. 2000 திரும்பப்பெறுதல் குறித்து தமிழிசையிடம் கேட்டபோது, “ நான் போடும் கோட்டும் ஒயிட்: நோட்டும் ஒயிட்” என்று பதிலளித்துள்ளார்

புதுவையில் தனியார் கல்லூரி ஆண்டுவிழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு  பகுதிதான். வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கிறது. தேர்வு எழுதாதவர் பல பேர் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளனர். மாணவர்கள் எந்த  ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டாம். 

தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வைக்க வேண்டும், தன்னம்பிக்கை வைக்க  மாரல் கிளாசஸ் நடத்த வேண்டும், தற்காப்பு கலைக்கான வகுப்புகள் வைக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர்   ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து  நடவடிக்கை எடுக்கப்படும்.

கவர்னருக்கு அதிகாரம் என்பதில் புதுவையில் கவர்னருக்கும்,  முதலமைச்சருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என  முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காத்துக்  கொண்டிருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. டெல்லி நிலை வேறு, புதுவை நிலை வேறு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்கான  நிலை வேறு. 

மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவதுதான் நாராயணசாமிக்கு கவலையாக இருக்கிறது என  தெரிவித்தார்.

அப்போது அவரிடம், மத்திய அரசின் ரூ.2 ஆயிரம் நோட்டு தடை குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த தடை பற்றி எனக்கு  கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட். ரூ.2 ஆயிரம் நோட்டு தடை பற்றி இன்னும் அறியவில்லை.  விபரங்களை அறிந்து பதிலளிக்கிறேன் என்றார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilisai soundararajan on 2000 rupees notes