நாகர்கோவில் உள்ள ஸ்காரட் கல்லூரியின் 130ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா, புதுச்சேரி ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை முயற்சி இரண்டிலும் தளராத மனதுடன் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை” என்றார்.
-
நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி 130வது பட்டமளிப்பு விழா
மேலும் அவர், “ஆணாதிக்கம் மிகுந்த இந்தச் சமூகத்தில் பெண்கள் இலக்கை எட்டும்வரை முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. நான் எம்.பி.பி.எஸ். படித்துள்ளேன்.
நிர்வாக திறனும் உண்டு. ஆனால் என் திறனை பாராட்டதவர்களை விட என் உருவத்தை கேலி செய்தவர்கள்தான் அதிகம். சில பத்திரிகைகள் எனது தோற்றத்தை, நிறத்தை, உருவத்தை கூட கிண்டல் செய்து எழுதின.
ஆனால் இந்த கேலி, கிண்டல்களுக்கு அப்பாற்பட்டு பணியை நிறைவேறறுவதிலேயே எனது எண்ணம் உள்ளது. குறிக்கோளை நோக்கி சோர்வின்றி, அச்சமின்றி பயணிக்க வேண்டும்” என்றார்.
-
நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி 130வது பட்டமளிப்பு விழா
தொடர்ந்து ஸ்கார்ட் கல்லூரி மாணவிகளை மேடைக்கு வரவழைத்து பேசினார். அப்போது உற்சாகமாக வந்த மாணவிகளிடம் இது மற்ற கல்லூரிகளில் நடைபெறாது என்றார்.
மேலும் பீகார் மாநிலத்தில் இருந்து ஸ்காட் கல்லூரியில் பயிலும் மாணவியிடம், “இதுதான் நமது தேசத்தின் ஒற்றுமையின் அடையாளம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“