தெலுங்கான ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க சார்பாக தமிழசை செளந்தரராஜன் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடுவதாகவும் சமீபத்தில் அறிவுப்பு வெளியானது. தமிழகத்திலும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை செளந்தரராஜன் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி, புதுச்சேரி அல்லது கன்னியாகுமரி மக்களவை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட்டு, தி.மு.க சார்பாக போட்டியிட்ட கனிமொழியிடம் தோல்வியடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“